பள்ளியில் ரம்ஜான் நோன்புக்கு தடை! சாப்பிட சொல்லி மிரட்டிய ஆசிரியர்! போராட்டத்தால் பரபர கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே அரசு பள்ளியில் ரம்ஜான் நோன்பு இருக்க கூடாது எனவும் நோன்பு இருந்த மாணவர்களை உணவு மற்றும் தண்ணீர் அருந்தச் சொல்லி மிரட்டிய கணித ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு உண்ணாமலும் கடும் நோன்பு மேற்கொண்டு தொழுகைக்குப் பின்னர் நோன்பை முடித்துக் கொள்வது இஸ்லாமியர்களின் வழக்கம்.
அரசு நிகழ்ச்சியில் திடீர் மின்தடை.. 15 நிமிடம் பேசாமலேயே நின்ற எம்எல்ஏ..கிருஷ்ணகிரி பரபரப்பு

பகீர் புகார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் ரம்ஜான் நோன்பு இருக்க கூடாது எனவும் நோன்பு இருந்த மாணவர்களை உணவு மற்றும் தண்ணீர் அருந்தச் சொல்லி மராட்டிய தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொரல்நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த புகார் எழுந்துள்ளது.

ரம்ஜான் நோன்பிருந்த மாணவர்கள்
இந்த அரசு பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் அங்கு படிக்கும் சில இஸ்லாமிய மாணவ மாணவிகள் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நோன்பை கடைபிடித்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மதிய உணவு உண்ணாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்துள்ளனர். இந்நிலையில் இதனை கேள்விப் பட்ட அந்த அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் செந்தில் என்பவர் நோன்பு இருந்த இஸ்லாமிய மாணவர்களை உணவு சாப்பிடுமாறும், குடிநீரை குடிக்குமாறும் வற்புறுத்தியுள்ளார். ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் சாப்பிட முடியாது என கூறிய நிலையில், தலைமை ஆசிரியை கலாவதி மற்றும் மற்றொரு ஆசிரியரான ஆங்கர் ஆகியோர் செந்திலுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

உணவு சாப்பிட வற்புறுத்தல்
தங்களை உணவு சாப்பிடச் சொல்லி ஆசிரியர்கள் வற்புறுத்தியது குறித்து இஸ்லாமிய மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த செயலைக் கண்டித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டோர், மாணவர்களை உணவு மற்றும் தண்ணீர் அருந்தச் சொல்லி மராட்டிய தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
இதையடுத்து போராட்டம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு நிலையில் அங்கு வந்த போலீசார், பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து புகாருக்குள்ளான பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் புகாருக்குள்ளான ஆசிரியர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.