கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிராமத்திலேயே முதல் முறை.. பிளஸ் 2 பாஸான பழங்குடியின மாணவி! நேரில் வாழ்த்திய டிஎஸ்பி.. நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கிராமத்திலேயே முதல்முறையாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார், பழங்குடியின மாணவி ஒருவர். அவரை டிஎஸ்பி சங்கீதா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ளது பழங்குடியின மக்கள் வசிக்கும் இருளர்பட்டி கிராமம். விறகு சேகரிப்பது, கூலி தொழில், ஆடு,மாடு மேய்ச்சலை பிரதானமாக கொண்ட இந்த கிராமத்தில் இதுவரை 10ம் வகுப்பு வரை படித்தவர்களே இல்லை என்கின்றனர்.

Village first: Tribal student passes plus 2 exam in Tamilnadu, gets greetings

பெண்களை பொருத்தவரை 8ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைத்து பள்ளிக்கு செல்லும் இடைநிற்றல் இன்றும் தொடர்கிறது.

12ம் வகுப்பு தேர்வு முடிவை கவனித்தீர்களா.. இந்த ஆண்டு இதெல்லாம் மிஸ்ஸிங்!12ம் வகுப்பு தேர்வு முடிவை கவனித்தீர்களா.. இந்த ஆண்டு இதெல்லாம் மிஸ்ஸிங்!

இந்த நிலையில், இருளர்பட்டி கிராமத்தில் உள்ள முனிராஜ் - நாகம்மா தம்பதிகளுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். மூத்த மகளை 9 ம் வகுப்புடன் திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், மகன் 7வது மட்டுமே படித்த நிலையில் தற்போது கட்டிடப்பணி செய்து வருகிறார்.
கடைசி மகளான கிருஷ்ணவேணியை மட்டுமாவது படிக்க வைக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு ஏழ்மையிலும் படிக்க வைத்துள்ளார்கள்.

Village first: Tribal student passes plus 2 exam in Tamilnadu, gets greetings

கிருஷ்ணவேணி பாலக்கோடு அரசு விடுதியில் தங்கி, திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, தற்போது 12 ஆம் வகுப்பில், தேர்ச்சி பெற்றுள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் இருளர்பட்டியில் உயர்கல்வி கல்வி என்பதே எட்டாக்கனியாக உள்ளநிலையில், முதல்முறையாக மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து தேன்கனிக்கோட்டை காவல் டிஎஸ்பி சங்கீதா, கிருஷ்ணவேணியை நேரடியாக அவரது வீட்டிலேயே சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பண உதவிகளை வழங்கினார்.

மாணவியிடம் எதிர்க்கால விருப்பதை கேட்டபொழுது, மாணவி ஐஏஎஸ் ஆவதே தனது விரும்பம் தெரிவித்ததால், சில ஆலோசனைகளை வழங்கிய டிஎஸ்பி சங்கீதா, படிப்பிற்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சலுகைகளை வழங்கி வருவதால் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொலைபேசி எண்ணையும் வழங்கினார்.

Village first: Tribal student passes plus 2 exam in Tamilnadu, gets greetings

மாணவியை உற்சாகப்படுத்தும் வகையில் டிஎஸ்பி சங்கீதா மாணவியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இருளப்பட்டி கிராமத்தில் முதல்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் 12ம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருப்பது அந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றது போல் என்னும் பொதுவான வார்த்தை உள்ளநிலையில் ஒருமாணவியின் உயர்கல்வி படிப்பால் அரசு அதிகாரியாக உயர்ந்து இருளர்பட்டி கிராம மக்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

English summary
A tribal student who has passed Class 12 which is for the first time in a village near Hosur. DSP Sangeetha met her in person and greeted her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X