கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதித்த கண் பார்வையற்றவர்.. கணீர் குரலால் பாட்டு பாடி வார்ட்டை மகிழ்விக்கும் திருமூர்த்தி

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நோயாளிகளை தன் இனிமையான குரலால் மகிழ்வித்து வருகிறார் கண்களை இழந்த மாற்று திறனாளி பாடகர் ஒருவர்.

Recommended Video

    இனிய பாடல்களால் கொரோனா வார்ட்டை மகிழ்விக்கும் இளம் பாடகர் திருமூர்த்தி - வீடியோ

    நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படித்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் மிகவும் பிரபலம். தந்தை- மகளுக்கிடையேயான உறவை சொல்கிறது இந்த பாடல்.

    இந்த பாடலை அதே குரல் வளத்துடன் பாடியதால் பிரபலமானவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்று திறனாளி இளைஞர் திருமூர்த்தி.

    தமிழக ரவுடிகளுக்கோர் கெட்ட செய்தி.. கடும் சட்டம் வருகிறது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழக ரவுடிகளுக்கோர் கெட்ட செய்தி.. கடும் சட்டம் வருகிறது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    பார்வையற்ற திருமூர்த்தி

    பார்வையற்ற திருமூர்த்தி

    பிறவியிலேயே கண்பார்வை இல்லாத திருமூர்த்தி நல்ல குரல் வளம் கொண்டவராக உள்ளார். இவரின் குரல் வளத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த இசையமைப்பாளர் இமான் தனது இசையில் பாட வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பாராட்டுகளை பெற்றது.

    மகிழ்விக்கும் திருமூர்த்தி

    மகிழ்விக்கும் திருமூர்த்தி

    இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பர்கூரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் நீங்க திருமூர்த்தி இசை வாசித்து பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    பிறவியிலேயே கண் பார்வை இல்லை என்றாலும் நல்ல குரல்வளம் உள்ளதால் அதன் மூலம் திருமூர்த்தி அனைவரையும் மகிழ்வித்து வருவது மிகவும் பாராட்ட கூடிய விஷயமாக உள்ளது. கொரோனா மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு இசை, யோகா, விளையாட்டு உள்ளிட்டவை மன அமைதியை கொடுக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

    பார்வையற்ற இளைஞர்

    பார்வையற்ற இளைஞர்

    இவரது பாட்டை அங்கிருக்கும் நோயாளிகள் கேட்டு நிம்மதி அடைகிறார்கள். மேலும் கொரோனா பாதித்து கண் பார்வையற்றவர் எப்படி மன தைரியத்துடன் எதிர்கொள்கிறார்களோ அது போல் நாமும் எதிர்கொள்வோம் என நோயாளிகள் தைரியத்துடன் சிகிச்சை பெறுவதாக கூறுகிறார்கள்.

    English summary
    Visible challenged person Tirumoorthy sings song in Krishnagiri Corona ward.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X