கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு

Google Oneindia Tamil News

சூளகிரி: சூளகிரி அருகே, குடிநீருக்காக கிணற்று நீரை திருடுவதாகவும் அதுகுறித்து புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோரி மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னல்கள்

இன்னல்கள்

இந்த கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த குழாய் நீரும், மின் மோட்டார் பழுதால் இரண்டு மாதங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மற்ற தேவை

மற்ற தேவை

அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கிராம மக்களின் வேதனையை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். மடம் செம்பரசனப்பள்ளி கிராம மக்கள் குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்காக தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர்.

அவல நிலை

அவல நிலை

இதனால் விவசாய கிணற்றில் உள்ள நீரை உரிமையாளர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் ஆபத்தை உணராமல் நீரை திருடி வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

மடம் செம்பரசனப்பள்ளி கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடு செய்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Water is theft from Well near Sulagiri as they couldnot face water crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X