கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேஸ் குடுத்தேனே.. ஏன் எடுக்கவில்லை.. கொந்தளித்த பச்சையம்மாள்.. 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி

இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.. கிருஷ்ணகிரியில்!-வீடியோ

    கிருஷ்ணகிரி: "கேஸ் குடுத்தேனே.. ஏன் யாருமே எடுக்கவில்லை" என்று கேட்டு, பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்றார்.

    ஓசூர் அருகே சின்ன சந்திர கிராமம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது கணவர் மாதேஷ் . ஆனால் மாதேஷ் பச்சையம்மாளுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டே போய்விட்டார்.

     Woman Suicide attempt in Krishnagiri Collectorate

    7 மாதங்களாக பச்சையம்மாள்தான் குழந்தைகளை கவனித்து வருகிறார். ஆனால் மாதேஷ் நிறைய கடன்களை வெளியில் வாங்கிவிட்டு எங்கோ தலைமறைவாக உள்ளார். இதனால் மாதேஷுக்கு கடன் கொடுத்தவர்கள், பச்சையம்மாளை பணத்தை திருப்பி தரும்படி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பச்சையம்மாள் தனது இரு பிள்ளைகளை அழைத்துச் சென்று கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸ்-க்கு வந்தார். திடுதிப்பென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை குழந்தைகள் மீதுஊற்றிவிட்டு, பின்னர் தன் மீதும் ஊற்றி கொண்டார்.

    இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ஓடிவந்து பச்சையம்மாளின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அவர் மீதும், குழந்தைகள் மீதும் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றினர்.

    அப்போது பச்சையம்மாள் போலீசாரிடம் "முன்னாடியே ஓசூர் ஸ்டேஷனில் கேஸ் குடுத்தேனே.. ஏன் யாருமே எடுக்கலை.. கடனை தீர்க்க என்கிட்ட வருமானம் இல்லையே.. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்கிறாங்களே.. எப்படி தருவேன்" என்று கதறினார். பின்னர் அதிகாரிகள், இது சம்பந்தமான நடவடிக்கை எடுப்பதாக பச்சையம்மாளுக்கு உறுதி கூறி அனுப்பி வைத்தனர்.

    English summary
    Woman attempt suicide with her two children due to family issue in Krishnagiri Collector Office today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X