கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி!

மின் கம்பம் ஏறும் பணியில் உடல் தகுதி தேர்வில் ஜோதி வெற்றி பெற்றுள்ளார்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஆண்களே செய்ய தயங்கும் ஒரு வேலையில் அசால்ட் காட்டிவிட்டார் ஜோதி.. சர்ரென எலக்ட்ரிக் போஸ்ட்டில் ஏறி விடுகிறார்.. 2 குழந்தைகளுக்கு தாயான ஜோதி, மின்துறையில் மின்கம்பங்கள் பழுது பார்க்கும் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவிதான் ஜோதி. 2 குழந்தைகள் உள்ளனர்.. ஐடிஐ தொழிற்கல்வியில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.

Women selects fitness test recruited tangedco gangman

படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா எதற்கு இருக்க வேண்டும், படிச்ச படிப்பு நாலு பேருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று நினைத்தார்.. அதற்காக மின்துறை சார்ந்த மின்கம்பம் ஏறுதல், மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளுக்கு அப்ளிகேஷன் போட்டார்.

இதற்கான உடற்தகுதித் தேர்வும் நடந்தது.. இதில் ஜோதி உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.. ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்றுதான் இந்த வேலை இவ்வளவு நாள் கருதப்பட்டது.. ஆனால் ஜோதி மின் கம்பத்தில் ஏறிய வேகத்தை பார்த்தால், அப்படி ஒரு எண்ணமே வராது.. கடகடவென அசால்ட்டாக அந்த மின்கம்பத்தில் ஏறி, சீரமைப்பு பணியினை சிறப்பாக செய்து காட்டியதுடன் அதற்கான உடற்தகுத் தேர்வில் தேர்வாகி விட்டார்..

மொத்தம் 1,170 பேர் உடல் தகுதி சோதனைக்கு வந்திருக்கிறார்கள்.. இதில் 337 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 61 வேட்பாளர்கள் பெண்கள், அவர்களில் ஒருவர் மட்டுமே இந்த தேர்வில் தகுதி பெற்றுள்ளதுதான் இதன் சிறப்பே!!! இதுவரை இந்த பணியில் மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்தனை துறைகளில் பெண்கள் கால்பதித்து வரும் நிலையில், எலக்ட்ரிக் கம்பத்தில் ஏறி ரிப்பேர் பண்ணுவது மட்டும் கடினமா என்ன?!

English summary
mother of two passes fitness test recruited tangedco gangman near krishnagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X