கோலாலம்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Corona D614G: மலேசியாவில் 10 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு..பீதியில் மக்கள்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: நாவல் கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியாக அல்லது உருமாற்றம் பெற்று D614G என்ற வைரசாக உருவாகியுள்ளது. இது கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிகமாக தொற்று பரப்பும் வீரியம் கொண்டது. இந்த வகையான வைரஸ் மலேசியாவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. முதலில் இந்தியர் ஒருவருக்கு இந்த வகையான வைரஸ் வந்திருந்து தற்போது, 45 பேருக்கு பரவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்ற ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வந்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்று.

அதிகரிக்கும் கொரோனா தொற்றும்... இறப்பும்... பரிசோதனை அதிகரிப்பு!!அதிகரிக்கும் கொரோனா தொற்றும்... இறப்பும்... பரிசோதனை அதிகரிப்பு!!

தற்போது

தற்போது

தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பிறழ்ந்து அல்லது உருமாற்றம் பெற்று வந்தது என்று கூறப்படுகிறது. இதன் வீரியம் தற்போது இருக்கும் நாவல் கொரோனா வைரசை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது, இந்த வகை வைரஸ் வேகமாக பரவும்.

இந்தியருக்கு அபராதம்

இந்தியருக்கு அபராதம்

மலேசியா சென்ற இந்தியரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். ஆனால், அவர் அதை மீறி வெளியே சென்று மற்றவர்களுக்கும் தொற்றை பரப்பியுள்ளார். இதையடுத்து அவர் மலேசியாவில் சிறையில் ஐந்து மாதங்களுக்கு அடைக்கப்படுகிறார். மலேசியாவில் இருக்கும் கெட்டா என்ற இடத்தில் இந்தியர் உணவு விடுதி வைத்துள்ளார். மலேசியா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2.15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தற்போது கெட்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது. குணமடைந்த பின்னர் சிறைக்கு அனுப்பப்படுவார்.

தொற்று பரவல்

தொற்று பரவல்

இந்தியாவில் இருந்து சென்றவுடன் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் பரிசோதனையில் இவருக்கு நெகடிவ் என்று வந்துள்ளது. இரண்டாவது பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்துள்ளது. அதற்குள் இவர் தனிமையில் இருக்காமல், விதியை மீறி, உணவு விடுதிக்கு வந்தவர்களுக்கும் தொற்றை பரப்பியுள்ளார்.

தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

இது மட்டுமில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த மற்றொருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கும் வீரியம்மிக்க புதிய தொற்று வைரஸ் இருப்பது அறியப்பட்டுள்ளது. ''தற்போது ஆய்வில் இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளால் இந்த வீரியம்மிக்க வைரஸ்களை அழிக்க முடியுமா என்பது சந்தேகம்'' என்று மலேசிய நாட்டின் சுகாதார இயக்குனர் ஜெனரல் ஹிஷம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

ஐரோப்பா

இதுபோன்ற வைரஸ் மாற்றம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக காணப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியா வேண்டுகோள்

மலேசியா வேண்டுகோள்

மலேசிய நாட்டின் சுகாதார இயக்குனர் ஜெனரல் ஹிஷம் அப்துல்லா தனது பேஸ்புக் பதில், ''தற்போது புதிய உருமாற்றம் பெற்று கொரோனா வைரஸ் தாக்கம் பாதிக்காமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். வைரஸ் உருமாற்றம் அல்லது பிறழவில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

11 முறை உருமாற்றம்

11 முறை உருமாற்றம்

இதற்கு முன்பு கொரோனா வைரஸ் பிறழ்வு அல்லது உருமாற்றம் என்பது பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் 11 முறை உருமாற்றம் அல்லது பிறழ்வு அடைந்துள்ளது. O, A2, A2a, A3, B, B1. இவற்றில் A2 வைரஸ் விரைவில் பரவும் வீரியம் கொண்டது என்று கூறப்பட்டு இருந்தது. வுகானில் பரவியதில் இருந்து இதுவரை 11க்கும் மேற்பட்ட முறையில் இந்த நாவல் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.

Recommended Video

    புதிய மைல்கல்லை எட்டிய கோவாக்சின்.. சோதனையில் பங்கேற்ற 50ல் 32 பேருக்கு நல்ல ரிசல்ட்
    D614G என்றால் என்ன

    D614G என்றால் என்ன

    இந்த வகை உருமாற்றம் பெற்று இருக்கும் வைரஸ் அமினோ ஆசிட் மாற்றத்தை உருவாக்கும்.

    English summary
    Malaysia finds new deadly coronavirus; jails Indian man for spreading the virus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X