கோலாலம்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பாதிப்பு உச்சம்- இந்தியர்கள் மலேசியா செல்ல செப்.7 முதல் தடை விதிப்பு

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியா செல்ல செப்டம்பர் 7-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களால் கொரோனா பரவுகிறது என கருதுகிறது மலேசியா.

அத்துடன் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. உலக நாடுகளில் ஒருநாளைய கொரோனா பாதிப்பு இந்தியாவில்தான் மிக அதிகமாக இருந்து வருகிறது.

Coronavirus: Malaysia bans Indians from entering country

இதனையடுத்து இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள், நீண்ட கால குடிநுழைவு அனுமதி அட்டை வைத்திருந்தாலும் கூட செப்டம்பர் 7-ந் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு.. 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங்ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு.. 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங்

மலேசியா அமைச்சர் இஸ்மாயில் யாக்கோப் இத்தகவலை தெரிவித்தார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது; இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகமானால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் யாக்கோப்.

English summary
Malaysia has banned the entry of Indians into the country due to the Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X