கோலாலம்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் தாக்குதல்: தீவிரவாத சதியில் ஜாகிர்நாயக்குக்கு தொடர்பா? மலேசியா நாடாளுமன்றத்தில் கேள்வி

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதில் மத பிரசாரகர் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பு உள்ளதா? என மலேசியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகிர் நாயக். இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் அடைக்கலாமாகி இருக்கிறார். அவரை மலேசியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என பல்வேறு இந்தியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Malaysia MP Ramkarpal Singh raises questiones over report of terror attack in India

இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த ரோஹிங்யா தீவிரவாத இயக்கம் ஒன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஹவாலா மூலம் பண பரிமாற்றம் நடந்ததாகவும் சென்னை தரகர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இத்தகவலை மலேசியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ராம்கர்பால் சிங் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இந்த சதித் திட்டத்தில் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பிருக்கிறதா? அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் ஒரு பெண் மாவட்ட செயலாளர் கூட இல்லையே.. ஓபிஎஸ், சசிகலா மீது கமல்ஹாசன் அட்டாக்அதிமுகவில் ஒரு பெண் மாவட்ட செயலாளர் கூட இல்லையே.. ஓபிஎஸ், சசிகலா மீது கமல்ஹாசன் அட்டாக்

ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? இந்திய பத்திரிகை குறிப்பிட்டுள்ள ரோஹிங்யா தீவிரவாத இயக்கம் எது என அரசு கண்டறிந்துவிட்டதா? எனவும் ராம்கர்பால் சிங் கேட்டிருந்தார்.

இதற்கு மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் பதிலளிக்கையில், தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா எந்த ஒத்துழைப்பையும் கேட்கவில்லை. இந்தியா கோரினால் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றார்.

English summary
Malaysia MP Ramkarpal Singh had raised questiones over report of terror groupus target India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X