கோலாலம்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமிக்ரான் ஆபத்தானது என்பதற்கு ஆதாரம் இல்லை… நம்பிக்கை அளிக்கும் சிங்கப்பூர்..!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: ஓமிக்ரான் வைரஸ் கொரோனாவின் மற்ற திரிபுகளை விட மாறுபட்டது அல்லது அதிக ஆபத்தானது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என சிங்கப்பூர் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது ஓமிக்ரான் வைரஸ். இதனால் பல்வேறு நாடுகளும் ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்த ஆரம்பித்துள்ளன நிலையில் சிங்கப்பூர் அரசு அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

சிங்கப்பூர் அரசு தற்போது அங்கு படிப்படியாக பல்வேறு தரவுகளை அறிவித்து வருகிறது, இந்நிலையில் ஓமிக்ரான் காரணமாக நாட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி வேண்டாம் எனவும் மக்களை குழப்ப நிலைக்கு ஆளாக்க அந்நாட்டு அரசு விரும்பவில்லை என்பதால் நிதானமான முடிவெடுத்து செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. எப்படி தோன்றியது? ஏன் மின்னல் வேகத்தில் பரவுகிறது? அமெரிக்க ஆய்வாளர் பகீர்அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. எப்படி தோன்றியது? ஏன் மின்னல் வேகத்தில் பரவுகிறது? அமெரிக்க ஆய்வாளர் பகீர்

 கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா சோதனையை சிங்கப்பூர் அரசு கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், வெளிநாடு செல்வோருக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி இருந்தது. நிலையில் தற்போது அதை மட்டும் நிறுத்தி கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்துள்ளது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூர் டியூப் எம்யுஎஸ் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் செயின்ட் ஜான் இதுகுறித்து கூறும்போது. ஓமிக்ரான் பீதி ஏற்படுத்தக் கூடிய வகையிலான வைரஸாக தெரியவில்லை எனவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் நிதானமாகத் தான் முடிவெடுக்க வேண்டும், பயண கட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே புதிய வகை வைரஸ் தடுத்துவிட முடியும் என தெரியவில்லை என்றார்..

 ஆதாரம் இதுவரை இல்லை

ஆதாரம் இதுவரை இல்லை

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள சேனல் நியுஸ் ஏசியா, ஓமிக்ரான் வைரஸ் கொரோனாவின் மற்ற திரிபுகளை விட மாறுபட்டது அல்லது அதிக ஆபத்தானது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை எனவும், தற்போதைய தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் புதிய மாறுபாட்டிற்கு எதிராக பயனற்றதாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

கூடுதல் தகவல்கள் ஆய்வு தேவை

கூடுதல் தகவல்கள் ஆய்வு தேவை

ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சிங்கப்பூர் வழியாக மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், வரும் வாரங்களில் உலக அளவில் இது போன்ற ஓமிக்ரோன் பாதிப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுகுறித்த கூடுதல் தரவுகள் மற்றும் ஆய்வுகள் இன்னும் தேவை என கூறியுள்ளது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    தடுப்பூசி பூஸ்டர் திட்டம்

    தடுப்பூசி பூஸ்டர் திட்டம்

    ஓமிக்ரான் மாறுபாடு டெல்டாவை விட அதிக அளவில் பரவக் கூடிய தாகவும் காலப்போக்கில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாற வேண்டிய நிலையில் சிங்கப்பூரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது நேரத்தைப் பொறுத்தே அமையும் என சிங்கப்பூர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே சிங்கப்பூரில் சுமார் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் ஓமிக்ரான் மாறுபாட்டுக் எதிராக சிறந்த பாதுகாப்பை மக்களுக்கு வழங்க தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தையும் தொடர இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளன..

    English summary
    The Singapore Health Ministry says there is no evidence yet that the Omigron virus is different or more dangerous than other strains of corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X