லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா! அற்புதமான செய்தி! கொரோனாவுக்கு பயந்து புகைப்பிடித்தலை விட்ட 10 லட்சம் பேர்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா காலகட்டத்தின்போது புகைப்பிடிப்பதை கைவிட்டுவிடுவார்கள் என ஒரு ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. அந்த ஆய்வு ஏப்ரலின் மத்தியிலிருந்து ஜூன் இறுதி வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.

10 lakhs people may put an end to smoking during this lockdown

இதில் 11 லட்சம் பேர் இந்த கொரோனா காலத்தில் புகைப்பிடித்தலை விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 வயது முதல் 29 வயதுடையவர்களில் 4 லட்சம் பேர் கொரோனா காலகட்டத்தில் தங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார்கள். அது போல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2.40 லட்சம் பேர் விடுவித்தனர்.

ஏப்ரல் மாதம் முதல் 30 வயது முதல் 49 வயதுடையவர்களில் 4 லட்சம் பேர் புகைப்பிடித்தலை விட்டு விட்டனர். கொரோனா வைரஸ் நேரடியாக மூச்சு பிரச்சினையை கொடுப்பதால் ஏராளமானோர் புகைப்பிடித்தலை விட்டு விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்

மேலும் இளைஞர்களை பொருத்தமட்டில் வீட்டுக்குள் இருப்பதால் குழந்தைகள், குடும்பத்தினர் முன்பு சிகரெட் பிடிக்க அச்சப்பட்டு கொண்டு அந்த பழக்கத்தையே விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். எனினும் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையோ இதைவிட 5 மடங்கு அதிகம் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். வரும் 2030-ஆம் ஆண்டு பிரிட்டன் புகைப்பிடித்தாவர்களின் நாடாக விளங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Research says that during this lockdown One million people in UK may quit their smoking habits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X