லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக் நிறுவனம்! 6 லட்சம் பயணிகள் தவிப்பு.. இந்தியாவில் பாதிப்பில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    திவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக் ! பயணிகள் தவிப்பு-வீடியோ

    லண்டன்: உலகின் பழமையானதும், மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் பயண நிறுவனமுமான (178 வயது) தாமஸ் குக் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம், சமீபகாலமாக தொழிலில் சரிவை சந்தித்தது. தொழிலை மீட்டெடுக்க, 250 மில்லியன் டாலர் அளவுக்கு தொகை தேவைப்பட்டது.

    178-year-old tour company Thomas Cook collapses

    அதை திரட்டுவதற்காக, நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், முயற்சிகள், பலனளிக்காததால், இன்று தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, இந்த நிறுவனத்தின் வர்த்தகம், விமானச்சேவை உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வந்துள்ளன. இதனால், உலகமெங்கிலும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த, 21,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

    இந்த திடீர் நடவடிக்கையின் விளைவால், உலகம் முழுவதும் சுமார் ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகள் தவிக்கின்றனர். அதில் பலரது டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பிரிட்டிஷ் குடிமக்கள். தாமஸ் குக் மூலம் தங்கள் பயணம், ஹோட்டல் மற்றும் உல்லாசப் பயணங்களை முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் இவர்கள்.

    தாமஸ் குக் உடனான உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை, நீங்கள் முன்பதிவு செய்திருந்தால், இந்த செய்தியை கவனமாகப் படியுங்கள். உங்கள் பணத்தைத் திரும்பப் பெற அல்லது உங்கள் பயணத் திட்டத்தைத் தொடர நீங்கள் என்ன செய்யலாம் பயன்படுத்தலாம் என்ற தகவல்தான் இது.

    தாமஸ் குக் வாடிக்கையாளர்களுக்கான உதவி தொலைபேசி எண் +44 1753 330 330 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏ) வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு வலைத்தளத்தையும் (thomascook.caa.co.uk) உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வலைத்தளத்தின் மூலம் அனைத்து தகவல்களையும் பெறலாம். மேலும், டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படும் வரை வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    தாமஸ் குக் இந்தியா நிறுவனம், செப்டம்பர் 21 அன்று இங்கிலாந்தின் தாமஸ் குக் பி.எல்.சி உடன் தொடர்புடையது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. தாமஸ் குக் இந்தியா முற்றிலும் தனி நிறுவனம் மற்றும் கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமானது. எனவே, தாமஸ் குக் பி.எல்.சி மூடப்படுவது இந்திய நிறுவனத்தை பாதிக்காது. 2012 ஆம் ஆண்டில், தாமஸ் குக் யுகே, தாமஸ் குக் இந்தியாவின் பங்குகளை ஃபேர்ஃபாக்ஸுக்கு விற்றது.

    தாமஸ் குக் இந்தியாவுக்கு, தாமஸ் குக் பி.எல்.சி (இங்கிலாந்து) உடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளது. தாமஸ் குக் இந்தியா ஒரு ட்வீட்டில் "இது கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமானது" என்று கூறியுள்ளது. எனவே பயணிகள் தாமஸ் குக் இந்தியாவில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் மற்றும் அதன் அனைத்து வசதிகளும் முன்பு போலவே கிடைக்கும். அதிகம் பாதிக்கப்பட்டது இங்கிலாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    178-year-old tour company Thomas Cook collapses but Indian branch doesn't get affect.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X