லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் 22 லட்சம் பேர், இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் பலியாகலாம் - ஷாக் ஆய்வு

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்காவில் மட்டும் 22 லட்சம் பேரும் இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் பலியாகலாம் என இங்கிலாந்தின் ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே குலைநடுங்க வைத்துள்ளது. சீனாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

1.8 லட்சம் பயணிகளுக்கு கொரோனா சோதனை.. சிறப்பு கிளீனிக்.. 4 மையங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் செம! 1.8 லட்சம் பயணிகளுக்கு கொரோனா சோதனை.. சிறப்பு கிளீனிக்.. 4 மையங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் செம!

இத்தாலியில் உக்கிரம்

இத்தாலியில் உக்கிரம்

ஆனால் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. உலகின் 140 நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் எப்படியாதாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகள், கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஈரானில் எச்சரிக்கை

ஈரானில் எச்சரிக்கை

ஈரானில் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் போனால் பல லட்சம் பலியாவதை தடுக்க முடியாது என அந்த நாட்டு அரசே அறிவித்திருக்கிறது. வழிபாடுகள் உள்ளிட்டவைகளுக்காக பொது இடங்களில் ஒன்றுகூடுதலை தவிர்க்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது. இதனை மீறி ஒன்றுகூடுவதால் உயிரிழப்புகள் பல லட்சமாக நேரிடும் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.

22 லட்சம் பேர் பலியாகலாம்?

22 லட்சம் பேர் பலியாகலாம்?

இந்நிலையில் இங்கிலாந்தின் இம்பீரியல் காலேஜ் மாடலிங் ஸ்டடி என்ற ஆய்வுக் குழுவினர் வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவினர் கொரோனா உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவால் 22 லட்சம் பேர் அமெரிக்காவில் மட்டும் உயிரிழக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் பலியாவார்கள் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

ஒப்பீட்டு எச்சரிக்கை

ஒப்பீட்டு எச்சரிக்கை

1918-ம் ஆண்டு ப்ளூ காய்ச்சலுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கும் நீல் பெர்கூசன், உயிரிழப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஓரிரு இடங்களில் விளைவுகளின் அடிப்படையில் அனைத்து பாதிப்பையும் அளவிடும் இண்டக்டிவ் ஆய்வு முறையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

English summary
A piece of research has warned 22 lakh coronavirus deaths in US, 5 lakh in UK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X