லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..?

Google Oneindia Tamil News

Recommended Video

    முகத்தில் பூசும் பவுடரைத் தின்னும் இங்கிலாந்தை சேர்ந்த விசித்திரப் பெண்.. அதும் பதினஞ்சு வருசமாவாம்..

    லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் முகத்துக்கு போடும் பவுடரை விரும்பி சாப்பிடும் வினோதமான பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர் ஒரு வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை வெறித்தனமாக தின்று தீர்த்து வருகிறார். இதுவரை அவர் 8000 பவுண்டுகளை (அதாவது 7 லட்சம் ரூபாய்) செலவிட்டுள்ளார்.

    ஜான்சன் அண்ட் ஜான்சன்

    ஜான்சன் அண்ட் ஜான்சன்

    லிசா ஆண்டர்சனுக்கு 5ஆவது குழந்தை பிறந்தவுடன்தான் அவருக்கு பவுடர் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரைத்தான் விரும்பி சாப்பிடுவாராம்.

    விழிபிதுங்கி

    விழிபிதுங்கி

    முதலில் பவுடரை யாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் சாப்பிட்டு வந்துள்ளார். பின்னர்தான் அவரது குடும்பத்தினருக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. பவுடருக்கு அடிமையான அவரை எப்படி மீட்பது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    லிசாவுக்கு பாதிப்பில்லை

    லிசாவுக்கு பாதிப்பில்லை

    இதனால் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர். இது போல் பவுடரை சுவாசித்தாலோ, தின்றாலோ புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் லிசாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

    சாப்பிட ஆசை

    சாப்பிட ஆசை

    30 நிமிடங்களுக்கு ஒரு முறை பவுடர் சாப்பிடுவாராம். லிசாவுக்கு பைக்கா நோய் ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பைக்கா சின்ட்ரோம் என்பது கல், மணல், பெயிண்ட், பவுடர் உள்ளிட்ட சத்து இல்லாத பொருட்களை சாப்பிட ஆசைப்படுவதாகும்.

    English summary
    England lady Lisa is eating Talcum powder for the past 15 years. Doctors says that she had pica syndrome.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X