லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Priti Patel | பிரிட்டனில் உயரிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு- வீடியோ

    லண்டன்: பிரிட்டனின் உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து நேற்று முதல்நாள் தெரசா மே பதவி விலகினார். பிரிக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை, அதில் தோல்வி அடைந்துவிட்டார் என்ற காரணத்தால் இவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தது.

    இதையடுத்து அவர் நேற்று முதல்நாள் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல் முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்

    யார் இவர்

    யார் இவர்

    போரிஸ் ஜான்சன் இயல்பாகவே வலதுசாரி கொள்கை கொண்டவர். இவரின் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் மற்ற முக்கிய தலைவர்களை விட இவர் அதிகமாக வலதுசாரி கொள்கை கொண்டவர். இவருக்கும் டிரம்பிற்கும் அத்தனை நெருக்கம். அவரும் வலதுசாரி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்தான் இந்திய பிரதமர் மோடியும் வலதுசாரி கொள்கை கொண்டவர் ஆவார்.

    மாற்றம்

    மாற்றம்

    இந்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்களை அவர் கொண்டு வருகிறார். அரசில் உயர் பதவியில் இருக்கும் இடதுசாரி கொள்கை கொண்டவர்களை அகற்றிவிட்டு வலதுசாரி கொள்கை கொண்டவர்களை பதவியில் அமர்த்தி வருகிறார். இந்த நிலையில் பிரிட்டனின் உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல்முறை

    முதல்முறை

    இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்தான் பிரீத்தி பட்டேல். பிரீத்தி பட்டேல் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். எம்பியான இவர், பல்வேறு அமைச்சர் பதவியை வகித்து உள்ளார். ஆனால் இவர் கடந்த ஒன்றரை வருடமாக எந்த பதவியிலும் இல்லை. முன்னாள் பிரதமர் தெரசா மேவிற்கு கீழ் சில முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், அவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

    என்ன ஆதரவு

    என்ன ஆதரவு

    இவர் மோடியின் தீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட கூடியவர். மோடி பிரதமர் ஆன பின் அதை முதலில் பாராட்டி சந்தோசம் அடைந்தார். இப்போது இன்னொரு வலதுசாரி கொள்கை கொண்ட பிரதமர் ஜான்சனுக்கு கீழ் இந்தியா பிரிட்டன் உறவு அதிக வலிமை பெறும் என்று இவரே கூறியுள்ளார். விரைவில் பிரிட்டன் இந்தியா இரண்டு நாடுகளும் முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திடும் என்று கூறியுள்ளார்.

    வாய்ப்புள்ளது

    வாய்ப்புள்ளது

    மோரிஸ் ஜான்சன் விரைவில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். அப்போது ஜான்சனுடன் பிரீத்தி பட்டேல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து தெரசா மேவை விமர்சித்து வந்த இந்த குஜராத் பெண்ணிற்கு தற்போது பிரிட்டனின் புதிய பிரதமர் ஜான்சன் உயரிய பதவியை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    A Gujarati girl who supports Modi gets the highest posting under Britain's New PM ministry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X