லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கிக்கடன் மோசடியில் நாளை தீர்ப்பு.. மோசடி மன்னன் மல்லையாவை பிடிக்க லண்டன் பறந்த இந்திய குழு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை வழக்கு விசாரணைக்காக நாடுகடத்துவதற்காக சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு லண்டனுக்கு விரைந்துள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை வழக்கு விசாரணைக்காக நாடுகடத்துவது பற்றிய வழக்கில் லண்டன் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு லண்டனுக்கு விரைந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா 2016ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

A joint team of CBI and ED goes to the UK to bring Mallaya

வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு வர மறுத்ததையடுத்து அவரை நாடு கடத்துவதற்காக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.

இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள அந்த நீதிமன்றத்தில் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.

அந்த வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ளது. இதில் விஜய் மல்லையாவிற்கு எதிராக தீர்ப்பு வரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் விரைந்துள்ளனர்.

இவர்கள் மல்லையாவிற்கு எதிராக தீர்ப்பு வரும்பட்சத்தில், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.,

English summary
Embattled liquor tycoon Vijay Mallya is scheduled to return Westminster Magistrates' Court in London on Magistrates' Court in London on Monday when his extradition trial is listed for a judgment hand-down. A joint team of CBI, ED left for UK to seeking Mallaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X