லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக!

Google Oneindia Tamil News

லண்டன்: ஒரு எளிய இரத்த பரிசோதனையை வைத்து கடுமையான கொரோனா ( கோவிட் -19 ) நோய்த்தொற்றின் அபாயத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுவின் சிக்னேச்சரை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இதுதான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கும் வாய்ப்புகளை 5 முதல் 10 மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பின்லாந்தின் ஹெல்சின்கியில் உள்ள ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நைட்டிங்கேல் ஹெல்த் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு சிறப்பு முன்னெச்சரிக்கைகள் தேவைப்படும் நபர்களை அடையாளம் காண இந்த சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.

இதேபோல், கொரோனா தடுப்பூசி கட்டாயம் தேவை என்கிற அளவுக்கு உடல் நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த சோதனை பயன்படுத்தப்படலாம்.
உலகம் முழுவதும் கடுமையான கொரோனாவுக்கு அதிக ஆபத்தில் இருக்கும் ஆரோக்கியமற்ற மக்களை அடையாளம் காண்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது! இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர் கொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது! இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்

ரத்த மாதிரிகள்

ரத்த மாதிரிகள்

உயர்-செயல்திறன் வளர்சிதை மாற்றத்தால் அளவிடப்படும் இரத்த பயோமார்க்ஸை வைத்து கடுமையான நிமோனியாவைக் கணிக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பாக கொரோனாவால் அவர் பாதிக்கப்படுவதற்கு முன்பே எடுக்கப்பட்ட ரத்த சாம்பிள்களை வைத்து ஆய்வு செய்தனர்.

10 மடங்கு அதிக வாய்ப்பு

10 மடங்கு அதிக வாய்ப்பு

இங்கிலாந்தின் பயோபாங்கிலிருந்து 100,000 க்கும் மேற்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு (பகுப்பாய்வு) செய்தனர், அதில் இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு சிக்னேச்சரை அடையாளம் கண்டனர், இந்த மூலக்கூறு உள்ளவர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிக்கும் போது பொதுவாக கடுமையான அறிகுறிகளை காட்டுகிறது. இந்த மூலக்கூறு சிக்னேச்சர் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஐந்து முதல் 10 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை அறியப்படாதது

இதுவரை அறியப்படாதது

இந்த கண்டுபிடிப்புகள் புதுமையானவை ஆகும், ஏனெனில் மூலக்கூறு சிக்னேச்சரில் உள்ள இரத்த பயோமார்க்ஸ் கொரோனாவின் கடுமையான வடிவங்களை உருவாக்குவதும், ஆரோக்கியமான மனிதர்களுக்கான ஆபத்து குறிப்பான்கள் என்பதும் இதுவரை அறியப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான அறிகுறி

கடுமையான அறிகுறி

இந்த கண்டுபிடிப்பின் விளைவாக கொரோனா தொற்றின் (COVID-19) காரணமாக ஒரு நபருக்கு லேசான அறிகுறிகள் உருவாகிறதா அல்லது கடுமையாக நோய்வாய்ப்படுவாரா என்று கணிக்கக்கூடிய இரத்த பரிசோதனையை நைட்டிங்கேல் ஹெல்த் அறிவியல் நிறுவனம் தொடங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள தங்களது கண்டுபிடிப்பினை medRxiv இதழில் வெளியிட்டுள்ளார்கள்.

ஆபத்தில் உள்ளது

ஆபத்தில் உள்ளது

"அதிக ஆபத்தில் இருப்பவர்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி, பல பயோமார்க்ஸர்களின் மூலக்கூறு சிக்னேச்சர்களை (கையொப்பத்தை) பார்ப்பது தான்" என்று ஆய்வின் முன்னணி விஞ்ஞானியும் நைட்டிங்கேல் ஹெல்த் அறிவியல் இயக்குநருமான பீட்டர் வூர்ட்ஸ் கூறினார்.

English summary
Scientists identified a particular molecular signature in the blood that increases the chances of hospitalisation by 5 to 10 times in people infected by Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X