லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் சாகலை.. சத்தியமா உயிரோடதான் இருக்கேன்.. இன்ஸ்டாகிராமில் கதறிய இயக்குநர்!

இறந்து விட்டதாக பரவிய வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் ஸ்பைக் லீ.

Google Oneindia Tamil News

லண்டன்: தான் இன்னும் உயிரோடு தான் இருப்பதாகவும், செய்தித்தாளில் வெளியானது தவறான செய்தி என்றும் விளக்கமளித்துள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குநர்களில் ஒருவரான ஸ்பைக் லீ.

மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்பைடர் மேன், எக்ஸ்-மேன் சீரிஸ்கள் மற்றும் இன்னும் பிற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தன் எழுத்துக்களால் வடிவமைத்து உருவாக்கியவர் ஸ்டான் லீ (95). மார்வல் நிறுவனத்தின் எழுத்தாளராக இருந்த இவரது அநேகம் எழுத்துக்கள் திரையில் சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களாக மிளிர்ந்தன.

american director spike lee responds after seeing his name in stan lee obituary

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்டான் லீ காலமானார். இது தொடர்பாக செய்தி வெளியிட நினைத்த நியூசிலாந்து ஊடகம் ஒன்று தவறுதலாக, ஸ்டான் லீ என்ற பெயருக்குப் பதில், ஸ்பைக் லீ என செய்தி வெளியிட்டு விட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குநர்கள் மற்றும் ஹாலிவுட் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை சமூகவலைதளம் வாயிலாக தெரியப் படுத்தினர்.

ஸ்பைக் லீயும் இயக்குநர் தான். கருப்பினத்தவர்களை மையமாக வைத்து மால்கோம் எக்ஸ், டு தி ரைட் திங் போன்ற முக்கியமான படங்களை இயக்கியவர். தான் இறந்து விட்டதாக பரவி வரும் வதந்தி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார் அவர்.

அதில், “இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஸ்டான் லீ; நானா இறந்தது? இன்னும் இல்லை. அதோடு நான் இன்னும் வாழ முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன்” என ஸ்பைக் லீ தெரிவித்துள்ளார்.

English summary
Stan Lee, the mastermind behind Marvel Comics, died Monday at age 95. Film director Spike Lee, a legend in his own right, is still very much alive. But a newspaper in New Zealand doesn't seem to know the difference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X