லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் கடும் புயல்.. ரன்வேயில் வெள்ளம்.. சைடு வாக்கில் தரையிறங்கிய விமானம்.. அசர வைக்கும் வீடியோ

லண்டனில் கடும் புயலுக்கு இடையே விமானம் ஒன்று சைடு வாக்கில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு பக்கம் கடும் புயல்.. ரன்வேயில் வெள்ளம்.. சைடு வாக்கில் தரையிறங்கிய விமானம்.. அசர வைக்கும் வீடியோ

    சென்னை: லண்டனில் கடும் புயலுக்கு இடையே விமானம் ஒன்று சைடு வாக்கில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. இந்த துணிச்சலான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    பிரிட்டனில் தற்போது கடுமையான புயல் வீசி வருகிறது. அங்கு தற்போது வீசி வரும் புயலுக்கு டென்னிஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த புயல் காரணமாக மிக கடுமையான வானிலை அங்கு நிலவுகிறது. மொத்தமாக லண்டன் அங்கே வெளியுலக தொடர்பை இழந்துள்ளது. 2 நாட்களாக விடமால் புயல் வீசி வருகிறது.

     மொத்தமாக திரும்ப பெறுகிறோம்.. கொரோனாவால் சீனா செய்யும் ''டீமானிடைசேசன்''.. ஷாக் நடவடிக்கை! மொத்தமாக திரும்ப பெறுகிறோம்.. கொரோனாவால் சீனா செய்யும் ''டீமானிடைசேசன்''.. ஷாக் நடவடிக்கை!

    விமானம்

    இந்த புயல் காரணமாக தற்போது அங்கு பல இடங்களில் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. லண்டனில் மொத்தமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. பிரிட்டனில் பிற பகுதிகளிலும் விமான போக்குவரத்தை தடை பட்டுள்ளது. ஏற்கனவே புறப்பட்ட விமானங்களும் தரையிறங்க கஷ்டப்பட்டு வருகிறது. பல வெளிநாட்டு மக்கள் இதனால் லண்டனில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    வீடியோ

    வீடியோ

    இந்த நிலையில்தான் லண்டனில் ஐரோப்பாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஏத்தினாட் ஏர்பஸ் ஏ380 விமானம் ஆகும் இது. நேற்று மாலை லண்டனில் உள்ள ஹேத்ரோ விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கும் நேரத்தில் சரியாக புயல் வீசிக் கொண்டு இருந்தது. இதனால் விமானத்தை தரையிறக்குவது மிகவும் கடினமானதாக இருந்தது.

    மிக கடினம்

    அங்கு காற்று ஒரு பக்கம் வீசியது. மேக மூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இன்றி இருந்தது. இன்னொரு பக்கம், மழை காரணமாக ஓடுதளத்தில் தண்ணீர் அதிக அளவில் ஓடிக்கொண்டு இருந்தது. இதனால் விமானத்தை எப்படி விமானிகள் தரையிறக்க போகிறார்கள் என்று கேள்வி எழுந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 186 பயணிகள் இருந்தனர். ஆனாலும் விமானி இந்த விமானத்தை மிகவும் துணிச்சலாக இறக்கினார்.

    இறக்கினார்

    இறக்கினார்

    ஆனால் விமானத்தை இவர் நேரடியாக தரையிக்காமல் சைடு வாக்கில் தரையிறக்கினார். காற்று காரணமாக விமானத்தை அவர் நேராக செலுத்த முடியவில்லை. சைடு பக்கமாக திருப்பி, மிக மிக மெதுவாக தரையிறக்கினார். மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து அவர் விமானத்தை தரையிறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விமானத்தை இப்படி சைடு வாக்கில் தரையிறங்கியது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

    English summary
    An Ethinad Plane Lands Sideways ar London's Airport due to Dennis Storm - Watch Video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X