லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐரோப்பிய நாடுகளுக்கு 400 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க அஸ்ட்ராஜெனெகா சம்மதம்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவமான அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி சனிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளூக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்த மருந்து கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Recommended Video

    Corona vaccine கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம்!

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தொற்று தடுப்பூசி மருந்தில் 400 மில்லியன் டோஸ் வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளூக்கு வழங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தடுப்பூசியின் உற்பத்தியை விரிவுபடுத்த விரும்புவதாகக் கூறியுள்ளதுடன், தொற்றுநோய்கள் அதிகமாக இருப்பதால் லாப நோக்கம் இல்லாமல் வழங்கப்போவதாக கூறியுள்ளது. மருந்து விநியோகங்கள் 2020 இறுதிக்குள் தொடங்கும்.

    3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா

    தடுப்பூசி அளவு

    தடுப்பூசி அளவு

    இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவின் உள்ளடக்கிய தடுப்பூசி கூட்டணி (IVA) கையெழுத்திட்ட முதல் ஒப்பந்தமாகும், இது பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகியோரால் உருவாக்கப்பட்டது, அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் விரைவில் தடுப்பூசி அளவைப் பெற உள்ளன.

    ஜெர்மனி தகவல்

    ஜெர்மனி தகவல்

    வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தில், IVA அதன் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்துடன் இணைக்க ஒப்புக்கொண்டதாக ஜெர்மனியின் சுகாதார அமைச்சகம் கூறியது.. அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட் கூறுகையில் "எங்கள் ஐரோப்பிய விநியோகச் சங்கிலி விரைவில் உற்பத்தியைத் தொடங்க இருப்பதால், தடுப்பூசி பரவலாகவும் விரைவாகவும் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

    மிகப்பெரிய ஒப்பந்தம்

    மிகப்பெரிய ஒப்பந்தம்

    கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை முன்கூட்டியே வாங்குவதை ஒப்புக் கொண்டு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் அஸ்ட்ராசெனெகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பில் கேட்ஸின் ஆதரவுடன் இரண்டு முயற்சிகள் மற்றும் அமரிக்க அரசாங்கத்துடன் 1.2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உள்ளிட்ட 2 பில்லியன் அளவிலான தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இலக்கை பூர்த்தி செய்ய உலகளவில் உற்பத்தி ஒப்பந்தங்களை ஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

    விரைவில் வருகிறது மருந்து

    விரைவில் வருகிறது மருந்து

    அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை ஏற்கனவே சிறப்பான கட்டத்தை உள்ளது. (ஐரோப்பாவில்) இலையுதிர் காலத்திற்குள் இது இறுதிகட்டத்தை எட்டிவிடும் (செப் முதல் டிசம்பர்) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் சுவாச நோயான COVID-19 க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை. இந்நிலையில் உலகின் பல நாடுகள் ஏற்கனவே தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. ஐரோப்பாவில் இன்னும் கிடைக்கவில்லை. உறுப்பு நாடுகளின் குழுவின் விரைவான ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    AstraZeneca Plc said on Saturday it signed a contract with European governments to supply the region with its potential vaccine against the coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X