லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துடிப்பான இளைஞரைபோல் காட்டுக்கு சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு

Google Oneindia Tamil News

லண்டன்: காட்டில் ஒரு துடிப்பான இளைஞரை போல் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டதாக சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். காடுகளில் வனஉயிரினங்களின் தன்மை குறித்து இவர் விளக்கி வருகிறார்.

மேலும் காட்டுக்குள் யாரேனும் சிக்கிக் கொண்டால் தப்பிப்பது என்பது குறித்து கிரில்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி

ஆகஸ்ட் 12-ஆம் தேதி

பிரபலமானவர்களை சாகச பயணத்துக்கு அழைத்து செல்லும் இவர் பராக் ஒபாமாவை அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியையும் கிரில்ஸ் சாகச பயணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்த நிகழ்ச்சி தொலைகாட்சிகளில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது.

பசுமையான பகுதி

பசுமையான பகுதி

இந்த நிகழ்ச்சி உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் நடந்தது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இந்தியாவில் பசுமையான காடுகள் , அரிய வகை உயிரினங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவை உள்ளன. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இந்த பசுமையான பகுதிகளை பார்க்க ஆசை வரும்.

சாகச பயணம்

சாகச பயணம்

இதற்கு பியர் கிரில்ஸுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். இதற்கு கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உங்களுடன் நிகழ்ச்சியில் பயணித்தது பெருமையாக உள்ளது என பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கிரில்ஸ் மீண்டும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் சாகச பயணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

அவர் கூறுகையில் இதுவரை பார்க்காத பிரதமர் நரேந்திர மோடியின் மறுபக்கத்தை இந்த நிகழ்ச்சி மூலம் நீங்கள் காண்பீர்கள். உலகிலேயே மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக திகழும் என எங்கள் குழுவினர் தெரிவித்தனர்.

முகத்தில் கஷ்டம் இல்லை

முகத்தில் கஷ்டம் இல்லை

பிரதமரின் பணிவு எனக்கு பிடித்திருந்தது. சில இடங்களில் குடையில்லாமல் மழையில் பயணிக்க வேண்டியது இருந்தது. ஆனால் பிரதமர் மோடியோ சிரித்தபடியே பயணித்தார். ஆற்றில் தார்பாய் படகில் சென்ற போதும் எந்த வித கஷ்டத்தையும் முகத்தில் காண்பித்து கொள்ளாமல் இருந்தார்.

பாதுகாப்பேன்

பாதுகாப்பேன்

ஆற்றில் நாங்கள் நீச்சலடித்த படி சென்றோம். அவர் முழுவதுமாக நனைந்து விட்டார். அப்போதும் அவர் முகத்தில் சிரிப்பை கண்டேன். வனவிலங்குகள், மோசமான வானிலை, பெரிய ஆறுகளிலிருந்து நான் நிச்சயம் உங்களை பாதுகாப்பேன் என ஆரம்பத்தில் கூறியபடி செய்துவிட்டேன்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அவர் என்னை நம்பினார். ஆயுதங்கள், பெட்டிகள் ஆகியவற்றுடன் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்தது மிகவும் கடினமாக இருந்தது. இத்தனை கடினங்களுக்கு மத்தியில் நாங்கள் எதை செய்தாலும் ஒரு உலகத் தலைவர், பிரதமர் மோடி அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இந்தியா ஒரு அழகான நாடு. சின்ன சின்ன திருத்தங்களை செய்தால் போதும்.

மோடி ஒத்துழைப்பு

சாலைகளில் குப்பை போடக் கூடாது, பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் குறித்து மோடி மிகவும் அக்கறை இருப்பதால்தான் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கெடுத்தார். ஒரு இளைஞரை போல் வனப்பகுதிகளில் அவர் பயணம் செய்தார்.

பாக்கியம்

பாக்கியம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அலாஸ்காவில் ஒரு காட்டுக்கு ஒபாமாவை சாகச பயணத்துக்கு அழைத்து சென்ற போது அவர் எப்படி ஒத்துழைத்தாரோ அது போன்று மோடியும் ஒத்துழைத்தார். நான் இந்தியாவின் நீண்ட கால ரசிகன். பிரபலமான மோடியை டிவி நிகழ்ச்சிக்காக சாகசப் பயணத்துக்கு அழைத்துச் சென்றது எனது பாக்கியம் என்றார்.

English summary
PM Modi was calm in crisis, says Bear Grylls who is conducting Man Vs Wild programme in Discovery Channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X