லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்க லைட்டா சாப்பிடுங்க...கொழுப்பு உணவுகள் வேண்டாம் - பிரிட்டன் அமைச்சர்

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க பிரிட்டன் மக்கள் உடல்பருமனை குறைக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவதுடன், உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும்

Google Oneindia Tamil News

லண்டன்: உடல் பருமனால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இந்த அபாயத்தை தடுக்க பிரிட்டன் மக்கள் கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து உடல் பருமனை குறைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஹெலன் வாட்லி தெரிவித்துள்ளார்.

குண்டாக இருப்பவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதோடு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இதனைத் தடுக்க பிரிட்டன் மக்கள் உடல் பருமனைக் குறைக்கும் சாப்பாடுகளை பார்த்து பார்த்து சாப்பிடுங்க, கொழுப்பான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் என்றும் அமைச்சர் ஹெலன் வாட்லி கூறியுள்ளார்.

குண்டாக இருந்து 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பவர்களின் இறப்பு விகிதம் இரட்டிப்பாவதாகவும் அமைச்சர் ஹெலன் வாட்லி கூறியுள்ளார்.

 சாத்தான்குளம்: கைதான போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா.. மதுரை ஜெயிலில் பரபரப்பு! சாத்தான்குளம்: கைதான போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா.. மதுரை ஜெயிலில் பரபரப்பு!

இங்கிலாந்தில் கொரோனா

இங்கிலாந்தில் கொரோனா

உலக முழுவதும் கொரோனாவிற்கு 1.66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 3 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். அங்கே குண்டாக இருப்பவர்கள்தான் அதிகம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

குண்டு உடம்புக்காரர்கள்

குண்டு உடம்புக்காரர்கள்

இங்கிலாந்தில் இளசுங்க முதல் பெருசுங்க வரை குண்டாகவே இருக்கின்றனர் காரணம் அந்த நாட்டு உணவுப்பழக்கம்தான். மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் குண்டாக இருப்பார்கள், உடம்பின் மீது அக்கறை காட்டுவதில்லை. அதனால்தான் கொரோனா தொற்றினால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்

உடம்பை கவனிங்க மக்களே

உடம்பை கவனிங்க மக்களே

இங்கிலாந்தில் குண்டு உடம்புக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் குண்டாகவே இருக்கின்றனர்.
அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானவர்கள் குண்டானவர்களே. இதனால்தான் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

சத்தான உணவுகளை சாப்பிடுங்க

சத்தான உணவுகளை சாப்பிடுங்க

கொரோனா வைரஸ்க்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் அதே நேரத்தில் உணவுப்பழக்க வழக்கத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து பிரதமர் நாட்டு மக்களின் உணவுப்பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழுப்பு உணவு விளம்பரங்கள்

கொழுப்பு உணவு விளம்பரங்கள்

டிவி விளம்பரங்களில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுப்பண்டங்கள் தொடர்பான விளம்பரங்களை டிவி, ஆன்லைனில் இரவு 9 மணிக்கு முன்பு ஒளிபரப்ப பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது. கடைகளிலும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களிலும் கலோரி தொடர்பான லேபிள்களை ஒட்ட வேண்டும் போன்ற உத்தரவுகளை பிரிட்டன் அரசு பிறப்பிக்க உள்ளது.

பிட்டாக இருங்க நோய் வராது

பிட்டாக இருங்க நோய் வராது

உடல் எடையை குறைக்க முடியாவிட்டாலும் உடம்பை பிட்டாக வைத்துக்கொள்ள சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கலாம் உயிருக்கு ஆபத்து இன்றி தப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார் பிரிட்டன் பிரதமர்.

ஆரோக்கியம் தரும் உணவுகள்

ஆரோக்கியம் தரும் உணவுகள்

உணவு விசயத்திலும் ஆரோக்கியத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்ற பிரச்சாரங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இது பற்றி பேசியுள்ள பிரிட்டன் சுகாதாரத்துறை ஹெலன் வாட்லி, உடல் பருமனால் கொரோனாவிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பிரிட்டன் மக்கள் குண்டு உடம்மை குறைக்கும் உணவுகளை சாப்பிடுங்க என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

English summary
British people should eat less to lose weight as being obese increases the risk of dying from the novel coronavirus Junior health minister Helen Whately said .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X