லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Boris Johnson elected as new UK PM

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பது தொடர்பாக 2016-ல் கருத்து கணிப்பு நடைபெற்றது. அதில் பிரிட்டன் வெளியேற ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதனால் திருத்தங்களுடன் பிரெக்ஸிட்டை பிரதமராக இருந்த தெரசா மே அமல்படுத்த முயன்றார். ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து தெரசாமே தமது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்க உள்ளார்.

புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Boris Johnson will become Britain’s next prime minister after being elected leader of the Conservative party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X