• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

55 வயது போரிஸ் ஜான்சனுக்கு 31 வயதில் காதலி.. 6 மாத கர்ப்பம் வேறு.. அவருக்கும் கொரோனா

|

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும். 55 ஆகிறது. அவருக்கு ஒரு காதலி இருக்கிறார். வயது 31. பெயர் கேரி சைமெண்ட்ஸ் (Carrie Symonds).

  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி..உடல்நிலை மோசமானது..

  இன்னும் இவர்களுக்குள் திருமணம் ஆகவில்லை என்றாலும் கேரி.. இப்போது 'கேரிங்காக' (carrying)இருக்கிறார். அதாங்க.. கர்ப்பமாக இருக்கிறார். ஆறு மாத குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் கேரி சைமண்ட்சுக்கும் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளதாம்.

  கேரிக்கு வைரஸ் தாக்கியது பற்றி பிறகு பார்க்கலாம். முதலில் பிரிட்டன் பிரதமர் போரிசுக்கும், கேரிக்கும் இத்தனை வயது வித்தியாசத்தில் எப்படி காதல் மலர்ந்தது என்பதை பாருங்கள்.

  ஐசியூவில் போரிஸ் ஜான்சன்.. சப்ளையாகும் ஆக்ஸிஜன்.. உயிருக்கு போராடுவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி

  போரிஸ் ஜான்சன் வாழ்க்கை

  போரிஸ் ஜான்சன் வாழ்க்கை

  போரிஸ் ஜான்சனின் இரண்டாவது மனைவி பெயர் மரினா வீலர். 1993 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு,

  லாரா லெட்டிஸ் (26), மிலோ ஆர்தர் (24), காசியா பீச் (22), மற்றும் தியோடர் அப்பல்லோ (20) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர். இப்படி நல்லபடியாக, இவர்கள் குடும்ப வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில்தான், கேரி சைமண்ட்ஸ் வடிவத்தில் இவர்கள் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது.

  விவாகரத்து

  31 வயதாகும் கேரி சைமண்ட்ஸ் அழகில் மயங்கினார் போரிஸ் ஜான்சன். இருவருக்குமே நெருக்கம் அதிகரித்து படுக்கை அறை வரை சென்றது. இதை அறிந்துகொண்டார் மரினா வீலர். கடும் கோபம் கொண்டார். போதும்ப்பா, இந்த வாழ்க்கை என்று 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

  காதலி கர்ப்பம்

  இந்த நிலையில்தான் கேரி சைமண்ட்ஸ் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். ஒருபக்கம் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான செய்தி உலக நாடுகளை கலங்கடித்து உள்ளது. கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்த அவர் தற்போது நோய் முற்றியதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த நேரத்தில்தான் கேரி சைமண்ட்ஸ் தனக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனிமையில் இருந்து வருவதாகவும் ஒரு தகவலை சொல்லியுள்ளார்.

  கர்ப்பிணி

  கர்ப்பிணி

  கர்ப்பிணிகள் இது போன்ற வைரஸ் தாக்குதலின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு பக்கம் தனது காதலரும், வருங்கால கணவருமான போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தனக்கும் தன் குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் இருக்கிறார், கேரி சைமண்ட்ஸ்.

  கோபம்

  கோபம்

  இதற்கு நடுவே ஒரு குட்டி பிளாஷ்பேக் போய்வரலாம். ஜான்சனுக்கும் அதாவது தங்கள் தந்தைக்கு, கேரி சைமண்ட்ஸ் என்ற இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதை தெரிந்ததும் அவரது குழந்தைகளுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதிலும் மூத்தவரான லாரா லெட்டிஸ், போரிசை, ஒரு சுயநல b*****d என்ற வார்த்தையை பயன்படுத்தி திட்டியதாக பிரிட்டீஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சாபம்தான் இப்போது போரிசையும், அவர் காதலியையும், படாதபாடுபடுத்தி வருகிறது என்று பிரிட்டன் மக்கள் முணுமுணுக்கிறார்கள்.

  6வது குழந்தை

  6வது குழந்தை

  கொசுறாக, பிளாஷ் பேக்கிற்குள் ஒரு பிளாஷ் பேக் உள்ளது. அது என்னவென்றால், மரினா வீலருக்கு பிறந்த 4 குழந்தைகள் மட்டுமல்ல, போரிசுக்கு 5வது ஒரு குழந்தையும் உள்ளது. கலை ஆலோசகரான ஹெலன் என்பவருடன் நெருக்கமாகி அப்படி ஒரு குழந்தையை பெற்றுள்ளார் போரிஸ். இதோ இன்னும் 4 மாதங்கள் ஆனால், அடுத்ததாக இன்னொரு ஜூனியர் வேறு வெளியே வரப்போகிறது. அப்படின்னா, 5 + 1 = 6 குழந்தைகள்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Boris Johnson and his girl friend Carrie Symonds, have announced they are engaged and expecting their first child together.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more