லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐசியூவில் போரிஸ் ஜான்சன்.. சப்ளையாகும் ஆக்ஸிஜன்.. உயிருக்கு போராடுவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

Recommended Video

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி..உடல்நிலை மோசமானது..

    ஆனால், அமைச்சரவை விவகாரத்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் இதை மறுத்துள்ளார். அதேநேரம், ஐசியூவில் போரீசுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

    தேசிய வானொலி நிலையமான எல்.பி.சி யிடம் பேசிய மைக்கேல் கோவ் "போரிஸ் வென்டிலேட்டரில் இல்லை. பிரதமருக்கு சில ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்படுகிறது. தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். " என்று தெரிவித்தார்.

    கொரோனா.. மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயல்லாந்து பிரதமர்!.. வாவ் கிரேட்! கொரோனா.. மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயல்லாந்து பிரதமர்!.. வாவ் கிரேட்!

    அமைச்சர் குடும்பம்

    அமைச்சர் குடும்பம்

    இந்த நேர்காணலுக்குப் பிறகு, மைக்கேல் கோவின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் பிரிட்டனின் தற்போதைய நிலை.

    கர்ப்பம்

    கர்ப்பம்

    ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொரோனா தாக்கிய முதல் உலகத் தலைவர்களில் ஒருவரான போரிஸ் ஜான்சன் மாறினார். அவர் தனிமைப்படுத்திக் கொண்டும் பலன் கிடைக்கவில்லை. எனவே, திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார், மேலும் அவருக்கும் கொரோனா தாக்கியிருந்தது. தற்போது அந்த அறிகுறிகளிலிருந்து மீண்டு வருகிறார்.

    உயிருக்கு போராட்டம்

    செவ்வாயன்று அனைத்து பிரிட்டிஷ் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களிலும், போரிஸுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றிய செய்திதான் இடம் பெற்றிருந்தது. "போரிஸ் தீவிர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று டெய்லி மெயில் ஹெட்லைன் கூறியது. டெய்லி மிரர் பத்திரிக்கையோ, தனது ஹெட்டிங்கில், sick Boris faces fight for life அதாவது, நோய்வாய்ப்பட்ட போரிஸ், உயிருக்காக போராடுகிறார் என்று தலைப்பிட்டிருந்தது.

    பிரிட்டன் நிலை

    பிரிட்டன் நிலை

    பிரிட்டனில், 52,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 5,373க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில், போரிஸ் இப்படி ஒரு நிலையில் சிக்கி தவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Boris Johnson not on a ventilator but has had oxygen support in ICU.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X