லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியேறுகிறது பிரிட்டன்.. பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஒப்புதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 30-01-2020 | oneindia tamil

    லண்டன்: ஐரோப்பிய பாராளுமன்றம் பிரிட்டனின் 'விவாகரத்து ஒப்பந்தத்திற்கு' இன்று அதன் இறுதி ஒப்புதலை வழங்கியது. இதன் மூலம் பிரெக்சிட் வரும் வெள்ளிக்கிழமை சுமூகமாக நடைபெற உள்ளது.

    பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 49, ஆதரவாக 621 வாக்குகள் கிடைத்தன. 13 உறுப்பினர்கள் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் விடைபெறுவதற்காக, பாரம்பரிய ஸ்காட்லாந்து பாடலான ஆல்ட் லாங் சைன் பாடப்பட்டது.

    Brexit deal given final approval by EU parliament

    பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து "கண்ணியமான" வெளியேற்றத்தை மேற்கொண்டு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு பிரெக்ஸிட் நடைபெற உள்ளது. இது பிரிட்டன் நாட்டிற்கு ஒரு "நம்பிக்கையின் தருணம்" என்றும் போரிஸ் தெரிவித்தார்.

    முன்னதாக புதன்கிழமை பேஸ்புக்கில் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், "நான் என்ன செய்யப்போகிறேன் என்பது எல்லோரையும் போல பொதுவானது, நான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கண்ணியமாக வெளியேறுவேன்"

    இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதம்இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதம்

    "இது நம் நாட்டுக்கு ஒரு சிறந்த தருணம், இது நம்பிக்கை மற்றும் வாய்ப்பின் தருணம், ஆனால் இது ஒரு நம்பிக்கையுடன் நாம் ஒன்றிணைவதற்கான ஒரு தருணம் என்றும் நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்திருந்தார்.

    இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஜான்சன், தனது நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

    English summary
    The European Parliament on Wednesday gave its final approval to Britain’s divorce deal from the bloc, paving the way for Brexit to take place on Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X