லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இந்தியாவில் இருந்து.. யாரும் இங்க வராதீங்க ப்ளீஸ்'.. ரெட் லிஸ்டில் இந்தியா.. பிரிட்டன் அதிரடி

Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்து பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

Britain Adds India To Travel Red List After Covid Surge

இருப்பினும், இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இரண்டு லட்சத்தைக் கடந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் அரசு இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் போட்டுக்கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் போட்டுக்கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும் ரெட் லிஸ்ட் பட்டியலில் சேர்ப்பதாகப் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்களைத் தவிர அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடிமான இந்த முடிவை வேறுவழியின்றி எடுத்துள்ளதாக பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Britain Adds India To Travel Red List After Covid Surge

பிரிட்டன் குடிமகன்களும் நாடு திரும்பியது கட்டாயம் 10 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசு அனுமதி அளித்துள்ள மையங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான செலவைப் பயணிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியா வருவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக முதலில் அவரது பயணத்திற்கான காலம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Britain's latest announcement adding India in 'Red List'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X