கொரோனாவை விட மிக கொடியதாம்.. பிரிட்டனில் மட்டும் 36 லட்சம் பேர் பாதிப்பு.. மிரளும் ஆய்வாளர்கள்
லண்டன்: கொரோனா பெருந்தொற்றில் இருந்தே இன்னும் உலகம் மீளவில்லை. இதற்கிடையே பிரிட்டன் நாட்டில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.
சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா இந்தளவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகமே இதைத் தடுக்கத் தான் போராடி வருகிறது.
புரிஞ்சிக்கோங்க.. அண்ணாமலை அண்ணாமலைதான்.. 3 தடவை அடித்து கூறிய செல்லூர் ராஜூ!
முதல் கொரோனா முடிந்த பிறகு, ஆல்பா, அதன் பிறகு பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் உலக நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை நாம் 50 லட்சத்திற்கும் அதிகமானோரை இழந்துள்ளோம். அதிகபட்சமாக அமெரிக்காவில் 8.50 லட்சம் பேரும் பிரேசில் நாட்டில் 6.20 லட்சம் பேரும் இந்தியாவில் 4.81 லட்சம் பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், இது அதிகாரப்பூர்வ கணக்கு மட்டுமே. உண்மையில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், கொரோனா பெருந்தொற்றால் மற்ற நோய்களுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் ஏற்பட்ட உயிரிழப்புகள் என இதையெல்லாம் கணக்குப் போட்டால் தான் கொரோனாவால் ஏற்பட்ட உண்மையான இழப்பு நமக்குத் தெரியும்.

இதர பாதிப்புகள்
இதைத் தாண்டி கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் பெரும் பாதிப்பை நாம் எதிர்கொண்டோம். கொரோனா ஊரடங்கால் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் வேலையிழந்தனர். கடந்த ஆண்டு சீனா தவிர மற்ற அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. இவை மட்டுமின்றி, ஊரடங்கு காரணமாகத் தனிமை என்ற மோசமான உளவியல் பாதிப்பாலும் பெரும் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

loneliness epidemic
பிரிட்டன் நாட்டில் முதியவர்கள் மத்தியில் இந்த loneliness epidemic அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அரசின் உதவியின்றி தனித்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை சுமார் 36 லட்சம் பேருக்கு அரசின் உதவிகள் கிடைப்பதில்லை. இது பெருந்தொற்று தொடங்கும் போது 15 லட்சமாக இருந்தது. அரசின் உதவிகளைப் பெற முடியாத பெரும்பாலானோர் தனிமையை உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மிக மோசம்
65 வயதைக் கடந்தவர்களே இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 84 சதவீதம் பேர் எவ்வித அரசு உதவியும் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களில் பெரும்பாலானோர் தனிமையால் மிக மோசமாக மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 80 வயதைக் கடந்தவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் தனித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாகவும் அவர்கள் loneliness epidemicஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உளவியல் பிரச்சினை
கொரோனா பெருந்தொற்றும் அதனால் ஏற்பட்ட இதர விஷயங்களும் முதியவர்களை மட்டுமின்றி அனைவரையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் Stess மற்றும் depression போன்றவையும் உளவியல் சிக்கல்களும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கொரோனா முடிந்துவிட்டாலும் கூட அது ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகள் சில ஆண்டுகள் வரை நீட்டிக்கும் என்றும் இருப்பினும் துர்திஷ்டவசமாக இதற்கு பெரும்பாலான நாடுகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக உள்ளது.