லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி

Google Oneindia Tamil News

Recommended Video

    Priti Patel | பிரிட்டனில் உயரிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு- வீடியோ

    லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த பலருக்கும், அமைச்சரவையில் இடம் கொடுத்து வரலாறு படைத்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    அதிகாரப்பூர்வமாக, நேற்று, பிரிட்டனின் புதிய பிரதமரானார், போரிஸ் ஜான்சன். அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியை போரிஸ் ஜான்சன் சந்தித்து ஆசி பெற்றார். பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மேவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பின்னர் அரசு அமைக்க, அவர் போரிஸ் ஜான்சனை அழைப்புவிடுத்தார்.

    கேபினெட்

    கேபினெட்

    இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றுபேரை தனது கேபினெட்டில் சேர்த்து அசத்தியுள்ளார். பிரிட்டன் வரலாற்றில் இத்தனை அதிகமாக இந்திய வம்சாவளியினர் கேபினெட் அந்தஸ்தில் பதவி வகிப்பது இதுதான் முதல் முறை. இந்திய வம்சாவளியான ப்ரீத்தி படேல் என்ற பெண் எம்.பி.க்கு, உள்துறை அமைச்சராக முக்கியமான துறையை ஒதுக்கி வரலாறு படைத்தார் போரிஸ் ஜான்சன். பிரிட்டிஷ் அரசில் இதுவரை இல்லாத மிக மூத்த இந்திய வம்சாவளி எம்.பி. ப்ரீத்தி பட்டேல் ஆகும்.

    நாராயண மூர்த்தி மருமகன்

    நாராயண மூர்த்தி மருமகன்

    ஆக்ராவில் பிறந்த அலோக் சர்மா எம்.பி., முன்பு வேலைவாய்ப்புதுறை அமைச்சராக இருந்தவர். இப்போது, சர்வதேச மேம்பாட்டுக்கான வெளியுறவு அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கிடையில், தொழிலதிபர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மருமகன், இன்போசிஸின் இணை நிறுவனரான, ரிஷி சுனக் எம்.பி., கருவூலத்தின் தலைமை செயலாளராக (இணையமைச்சர்) பதவி உயர்வு பெற்றுள்ளார். எனவே அவரும் அமைச்சரவையில் கலந்து கொள்வார். இவர் முன்பு வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சமூகங்களுக்கான துறையில் ஜூனியர் அமைச்சராக இருந்தார்.

    புது வரலாறு

    புது வரலாறு

    31 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் எட்டில் ஒரு பகுதியினர் தேசிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் இனரீதியாக வேறுபட்ட அமைச்சரவை இதுதான். ப்ரீத்தி படேலுக்கு ஒதுக்கப்பட்ட துறை என்பது பிரிட்டிஷ் அரசின், மூன்றாவது மிக முக்கியமான பதவியாக கருதப்படுகிறது, தேசிய பாதுகாப்பு, குற்றங்களைச் சமாளித்தல், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாளுதல் ஆகியவற்றுக்கான துறை பொறுப்பாளர் இவராகும்.

    சந்திப்புகள்

    சந்திப்புகள்

    2016 ஆம் ஆண்டில் ப்ரீத்தி சர்வதேச முன்னேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் பிரிட்டநில் முதல் பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமைச்சராகி வரலாறு படைத்தார். ஆனால் விடுமுறைகாலத்தின்போது இஸ்ரேலிய அமைச்சர்களுடன் அங்கீகரிக்கப்படாத சந்திப்புகளை நடத்தியதால் 2017 நவம்பரில் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

    English summary
    Britain now has the most Indian Cabinet in its history after new UK Prime Minister Boris Johnson gave three Cabinet positions to MPs of Indian origin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X