லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி- 90 வயது மூதாட்டிக்கு முதலில் செலுத்தப்பட்டது!

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 90 வயது மூதாட்டி மார்க்ரெட் கீனன் என்பவருக்கு முதன் முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Recommended Video

    #BREAKING 90 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி..!

    உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,79,34,940. கொரோனாவால் இதுவரை 15,50,169 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.

     கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகம் தயார்.. 51 இடங்களில் பாதுகாப்பு மையம் கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகம் தயார்.. 51 இடங்களில் பாதுகாப்பு மையம்

    பிரிட்டன் ஒப்புதல்

    பிரிட்டன் ஒப்புதல்

    கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஃபைசர் நிறுவனம்- பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு கொடுக்க பிரிட்டன் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

    ரஷ்யாவில் ஸ்புட்னிக்

    ரஷ்யாவில் ஸ்புட்னிக்

    இதனிடையே ரஷ்யா தமது ஸ்புட்னிக்V தடுப்பூசியை திடீரென பொதுமக்களுக்கு போட தொடங்கியது. இந்த நிலையில் பிரிட்டனில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது தொடங்கியது.

    பிரிட்டனில் தடுப்பூசி

    பிரிட்டனில் தடுப்பூசி

    90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கீனன் என்பவருக்கு இந்த தடுப்பூசி முதலில் போடப்பட்டது. இது தொடர்பாக மார்க்ரெட் கீனன் கூறுகையில், முதலாவது கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். எனக்கு அடுத்த வாரம் 91-வது பிறந்த நாள். இதை என்னுடைய பிறந்த நாள் பரிசாக கருதுகிறேன் என்றார்.

    21 நாட்களில் 2-வது டோஸ்

    21 நாட்களில் 2-வது டோஸ்

    இன்று காலை இங்கிலாந்து நேரம் காலை 6.31 மணிக்கு இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி 21 நாட்களில் போடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Britain readies for Coronavirus vaccine rollout from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X