லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா ஒரே நாளில் 39,036 பேர் பாதிப்பு - 574 பேர் மரணம்

பிரிட்டனில் ஒரே நாளில் 39,036 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் ஒரே நாளில் 39,036 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவிற்கு பிரிட்டனில் மொத்தம் 2,188,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனாவிற்கு 574 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை 69,625 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் தற்போது வேகமாக பரவிவருவது தென் ஆப்பிரிக்க வைரஸ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப் பட்டது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வைரஸ் பரவியது. ஆசியா நாடுகள், அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டாலும் 95 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Britain spreading New Covid strain 39,036 people affects in a single day - 574 deaths

பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தது. அதன்பின் கடந்த ஜூன், ஆகஸ்டில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

பிரிட்டனில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். பிரிட்டனில் ஒரே நாளில் 39,036 பேருக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவிற்கு பிரிட்டனில் மொத்தம் 2,188,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனாவிற்கு 574 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை 69,625 ஆக உயர்ந்துள்ளது. இதே போல பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

பிரிட்டனில் கொரோனா வைரஸின் மரபணு மாறி புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய கொரோனா வைரஸை ஒப்பிடும்போது புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் 70 சதவிகிதம் வரை அதிவேகமாக பரவி வருகிறது.

தென்கிழக்கு பிரிட்டன் பகுதியான கென்ட்டில் முதல்முறையாக இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வைரஸ் கென்ட் கொரோனா வைரஸ் என அழைக்கப்படுகிறது. பிரிட்டனில் தீவிரமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் வைரஸின் தன்மையைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகவலை பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அரசு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு தகவலை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில்தான் புதிய வைரஸை கண்டறிய முடிந்தது. இங்கும் அத்தகைய வைரஸ் பாதிப்பு இருப்பதை உணர முடிந்தது. புதிய ரக வைரஸ் மிக எளிதாக பரவுவதோடு, அடுத்தடுத்து தன்னை உருமாற்றி வேறு வடிவமெடுப்பதும் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது என்று மாட் ஹான்காக் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் அனைத்து வகையான பொருட்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 15 நாட்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள், அங்கிருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை உடனடியாக தனி மைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாடர்னா இன்கார்ப்பரேஷன் நிறுவனம், தங்களது மருந்து புதிதாக பரவி வரும் வைரஸையும் எதிர்க்கும் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.

English summary
In Britain, 39,036 people have been diagnosed with a new mutated corona infection in a single day. A total of 2,188,587 people in the UK have been affected by the corona. 574 people died in a single day to the corona in the UK. The death toll for the corona has risen to 69,625. The current fastest-spreading South African virus in the UK has also been identified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X