India
  • search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது பிரிட்டனின் "அத்திப்பட்டி!" 650 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய.. அழகிய நகரம் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாட்டில் அருகே சுமார் மிக மிகப் பழமையான நகரங்களில் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக நாம் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறோம். கடுமையான வெப்பம் ஒருபுறம் என்றால் பருவம் தவறிப் பெய்யும் மழை மறுபுறம் பெரிய பிரச்சினையைத் தருகிறது.

புவி வெப்ப மயமாதல் காரணமாக அதிகரிக்கும் கடல் நீர் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் வரும் காலங்களில் பல முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

பிரிட்டன் பார்லியில் மோடியை வம்புக்கு இழுத்த பெண் எம்பி! சீண்டவேண்டாம் என்கிறார் சட்ட அமைச்சர் பிரிட்டன் பார்லியில் மோடியை வம்புக்கு இழுத்த பெண் எம்பி! சீண்டவேண்டாம் என்கிறார் சட்ட அமைச்சர்

 மாயம்

மாயம்

கடந்த காலங்களிலும் இதுபோல தீவுகள் கடலில் மூழ்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அது புவி வெப்ப மயமாதல் காரணமாக ஏற்படவில்லை. பொதுவாகவே இதுபோல சிறு தீவுகளை சில சமயங்களில் கடல் நீர் மூழ்கி அழித்துவிடும். அதுபோல காணாமல் போன ஒரு நகரம் தான் இப்போது பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் எதோ இப்போது காணாமல் போன நகரம் இல்லை. சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நகரம் மயமானதாகக் கூறப்படுகிறது.

நகரம்

நகரம்

பல தலைமுறைகள் தேடலுக்குப் பின்னர் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Ravenser Odd என்பது ஒரு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இருந்த மற்ற துறைமுக நகரங்களைக் காட்டிலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அந்த காலகட்டத்தில் மீன்பிடி படகுகள் மற்றும் சரக்கு கப்பல்கள் நிறுத்தும் முக்கிய இடமாக இது இருந்தது.

 முக்கியம்

முக்கியம்

13ஆம் நூற்றாண்டின் இந்த நகரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் இங்கு இருந்துள்ளது. 1299ஆண்டில் இது மிகவும் செழிப்பான கடற்கரை நகரமாக மாறியது. மிகவும் செழிப்பாக வாழ்ந்த அப்பகுதி மக்களுக்கு 1300 நடுப்பகுதியில் பேரபாயம் காத்திருந்தது. அந்த காலகட்டத்தில் இந்த ஒட்டுமொத்த நகரமே நீருக்கு அடியே மூழ்கிப் போனது. அதன் பின்னர் கடந்த 650 ஆண்டுகளாக இந்த நகரத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு ஏன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியவில்லை.

 கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

கடந்த பல ஆண்டுகளாக இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிரமாக முயன்றனர். இந்தச் சூழலில் தான் சமீபத்தில் அங்குக் கரைக்கு மிக அருகிலேயே ஆய்வாளர் ஒருவர் தேடிய போது இந்த நகரைக் கண்டுபிடித்துள்ளார். தண்ணீரின் மேற்பரப்பிற்கு அடியில் சில மீட்டர் தூரத்தில் பாறைகளும் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பு, ஆய்வாளர்கள் அனைவரும் தவறான இடங்களிலும் தேடியதாலேயே பல நூற்றாண்டுகளாக இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

 செம ஷாக்

செம ஷாக்

யார்க்ஷயர் கடற்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் இந்த ரேவன்சர் ஒட்க்கான நகரம் இருந்ததாக நம்பப்பட்டது. இதனால் அப்பகுதியிலேயே ஆய்வாளர்கள் அதிகம் தேடினர். ஆனால், இந்த ஆய்வாளர் கரைக்கு அருகே தேடிய போது தான் இந்த மூழ்கிய நகரத்தைக் கண்டறிந்துள்ளனர். நகரம் இடம் மாறியதா இல்லை வரலாற்றில் இருந்த பிழையான தகவல்களை கொண்டு இவ்வளவு காலம் ஆய்வாளர்கள் தேடினார்களா எனப்து புதிராகவே உள்ளது.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இது குறித்து ஹல் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் பேராசிரியர் டான் பார்சன்ஸ், "இது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு. medieval காலத்தில் இருந்த முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்று. இந்த நகரத்தை ஆய்வு செய்தால் medieval காலத்தைக் குறித்து நம்மால் புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். வரும் காலத்தில் இந்த நகரம் குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது" என்றார்.

English summary
An old town that was swallowed entirely by seas centuries ago has been found after decades: (650 ஆண்டுகள் பழமையான தீவு பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிப்பு) After 650 years, an old town is discovered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X