லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த ஹோட்டலிலும் என்ன வேணாலும் சாப்பிடுங்கள்.. 50% மட்டும் பில் கட்டுங்க.. பப்பிலும் இதேதான்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் எந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி என பிரிட்டிஷ் அரசு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்தார்கள். வெளிநாடுகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

அந்த வகையில் மக்களின் சுமையை குறைக்க பிரிஷ்டிஷ் அரசு ஒரு சூப்பரான அதிரடி அறிவிப்பை கொடுத்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை உணவகங்களில் இருந்து உணவருந்தும் அனைவரின் 50 சதவீத கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் - மருத்துவர்களுக்கு நன்றிகொரோனாவில் இருந்து மீண்ட அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் - மருத்துவர்களுக்கு நன்றி

குடும்பம்

குடும்பம்

சிறுவர்கள் உள்பட அனைவருக்கும் அதிகபட்சம் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும் வகையில் இந்த புதிய சட்டத்தை இங்கிலாந்து அரசு அமலுக்கு கொண்டு வர உள்ளது. அதாவது 4 பேர் கொண்ட ஒரு குடும்பமானது 80 பவுண்டு தொகைக்கு உணவருந்தினால் 40 பவுண்டுகள் மட்டும் செலுத்தினால் போதுமானது.

5 நாட்கள்

5 நாட்கள்

நாட்டின் மொத்த குடிமக்களுக்கும் பயன்தரும் திட்டம் இதுவென சேன்ஸலர் ரிஷி கனாக் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் உணவகங்கள் வழியாக இதை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு உணவகங்களின் வங்கிக் கணக்குகளில் 5 நாட்களுக்குள் அரசு அந்த தள்ளுபடி தொகையை செலுத்தும்.

மதுபான விடுதிகள்

மதுபான விடுதிகள்

உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவையில் பணியாற்றும் 18 லட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்திலும் 5 லட்சம் பவுண்டு வரையான சொத்துகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் ஆண்டு வரை முத்திரை வரியை அரசு ரத்து செய்துள்ளது.

தங்குமிடம்

தங்குமிடம்

விருந்தோம்பல், தங்குமிடங்களுக்கான மதிப்பு கூட்டு வரிகளை 20 சதவீதத்திலிருந்து மிகக் குறைவாக 5 சதவீதமாக திருத்தியுள்ளது. 18-24 வயதுடைய பயிற்சி பெறுபவரை பணியமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 1,000 பவுண்டுகள் ரொக்க போனஸ் கிடைக்கும் என்பதை சேன்ஸலர் ரிஷி உறுதி செய்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை சுற்றுச்சூழல் நட்புறவாக மாற்ற 5,000 பவுண்டுகள் வரை மானியம் பெறும் திட்டமும் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

English summary
British Government will pay 50 percentage of Restaurant and pub bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X