லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் பிரிட்டன்.. சாதித்த போரிஸ் ஜான்சன்.. ஜனவரி 31ம் தேதி விடைபெறும்!

ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வரும் ஜனவரி 31ம் தேதி வெளியேறுகிறது.

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வரும் ஜனவரி 31ம் தேதி வெளியேறுகிறது. ஐரோப்பா யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த மே மாதம் முன் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகினார். ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று அங்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரிக்சிட் மசோதாவை தெரசா மே தாக்கல் செய்தார்.

ஆனால் அவரின் மசோதாவிற்கு சொந்த கட்சி எம்பிக்களே ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதா தோல்வியில் முடிந்தது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தெரசா மே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனால் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமர் ஆனார்.

 ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்படத்திற்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு! ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்படத்திற்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு!

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவராலும் பிரக்சிட் மசோதாவை தாக்கல் செய்து அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் தனது ஆதரவு எம்பிக்களை அவைக்கு கொண்டு வரும் வகையில், மொத்தமாக பொது தேர்தலுக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார். அதன்பின் தேர்தலை சந்தித்து இவர் தேர்தலிலும் வெற்றியை பெற்றார்.

பெரும்பான்மை

பெரும்பான்மை

தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை இருக்கிறது. பொதுத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபராமாக வென்றது. இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரிக்சிட் வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வென்றுள்ளார்.

என்ன வெற்றி

என்ன வெற்றி

ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற மசோதாவிற்கு ஆதரவாக 330 பேர் வாக்களித்தனர். ஏதிராக 231 பேர் வாக்களித்தனர். இந்த மசோதா இனி ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் எனப்படும் கீழவையில் நிறைவேற்றப்படும். அங்கும் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் இந்த மசோதா வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

வெளியேறும்

வெளியேறும்

இதனால் வரும் ஜனவரி 31ம் தேதி ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. அந்த நாட்டின் பல வருட கோரிக்கை இதனால் நிறைவேறி உள்ளது. இதனால் அந்நாட்டில் நிறைய பொருளாதார மாற்றங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
British MPs approve for Brexit Deal today: UK all set to leave EU on Jan 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X