லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஆனால் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்பாடு நேற்று எட்டப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் எதிர்த்துள்ளன.

British MPs vote to delay Brexit deal decision

இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்பதை உலகமே எதிர்நோக்கியது.

இன்றைய தினம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

அப்போது, பிரதமர், போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவை தாமதப்படுத்த வேண்டும் என்று, பிரிட்டிஷ் எம்.பி.க்கள் வாக்களித்தனர், அக்டோபர் 31 காலக்கெடுவுக்கு முன்னர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களைப் படித்து பார்க்க கால நேரம் தேவை என்று வாதிட்டனர்.

2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரெக்சிட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இதன்மீது எம்பிக்கள் வாக்களித்தனர்.

322 எம்பிக்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும் 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, போரிஸ் ஜான்சன் கூறுகையில், அக்டோபர் 31 அன்று புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்துடன் நாங்கள் புறப்படுவதே இங்கிலாந்து மற்றும் முழு ஐரோப்பாவிற்கும் சிறந்த விஷயம்.

ரோஹித் அடித்த "சேவாக்" ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்!

நான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாமதமாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், அவ்வாறு செய்ய சட்டம் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில், முறையான திரும்பப் பெறுதல் ஒப்பந்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தினால், ஒருவேளை அக்டோபர் 31 காலக்கெடுவிற்குள், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசால் முடியும் என்று தெரிகிறது.

English summary
British MPs on Saturday voted to delay a decision on Prime Minister Boris Johnson's Brexit deal, arguing they needed more time to study its contents before an October 31 deadline.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X