லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் சீனா... அச்சத்தில் அமெரிக்கா... 3ஆம் இடத்தில் இந்தியா

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக 2028ஆம் ஆண்டிலேயே உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகச் சீனா உருவெடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியதால் பல நாடுகளும் ஊரடங்கை அறிவித்தன.

இதன் காரணமாக அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, 2021 ஆண்டில் சீனா தவிர மற்ற அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்துள்ளது.

சீனா vs அமெரிக்கா

சீனா vs அமெரிக்கா

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கருப்பொருளாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார சண்டை சில காலமாக உள்ளது.

சீனாவுக்கு லாபத்தைக் கொடுத்த கொரோனா

சீனாவுக்கு லாபத்தைக் கொடுத்த கொரோனா

கொரோனா பரவலும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் இந்தச் சண்டையில் சீனாவுக்கு ஆதரவாக அமைந்தது. வைரஸ் பரவலின் ஆரம்ப நாள்களிலேயே அமல்படுத்தப்பட்ட மிகக் கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட சீனாவின் திறமையான நிர்வாகம் காரணமாக வைரஸ் பரவல் அங்கு விரைவில் கட்டுக்குள் வந்தது.

அமெரிக்காவை ஓவர்டேக் செய்யும் சீனா

அமெரிக்காவை ஓவர்டேக் செய்யும் சீனா

இதனால் சீனாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஓவர்டேக் செய்து உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகச் சீனா உருவெடுக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு கணிக்கப்பட்டதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகச் சீனா உருவெடுக்கவுள்ளது.

நல்ல வளர்ச்சி, ஆனால் பத்தாது

நல்ல வளர்ச்சி, ஆனால் பத்தாது

2021ஆம் ஆண்டு முதல் 2026 ஆண்டு வரையிலான சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும். அதன் பின்னர் 2026-30 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 4.5%ஆக குறையும். அதேநேரம் அமெரிக்கா 2021ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல பொருளாதார வளர்ச்சியை அடையும். இருப்பினும், அதன் வளர்ச்சி 2022-2024 காலகட்டத்தில் ஆண்டுக்கு 1.9 சதவீதமாகவும், அதன் பின்னர் 1.6 சதவீதமாகவும் குறையும்.

ஜப்பானை ஓவர்டேக் செய்யும் இந்தியா

ஜப்பானை ஓவர்டேக் செய்யும் இந்தியா

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானும், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஜெர்மனியும் அடுத்த 10 ஆண்டுகள் இருக்கும். 2030களின் முற்பகுதியில் இந்தியா இந்த இரு நாடுகளையும் ஓவர்டேக் செய்து உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும். தற்போதைய சூழ்நிலையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிரிட்டன் பொருளாதாரம், 2024ஆண்டில் ஆறாவது இடத்திற்குச் செல்லும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம்

கொரோனாவின் தாக்கம்

கொரோனா பாதிப்பு காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி குறையவில்லை, மாறாகப் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், "அதிகரித்து வரும் வட்டி விகிதங்களால் 2020களின் நடுப்பகுதியில் ஒரு பொருளாதார சுழற்சி ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது கொரோனா பாதிப்பு காரணமாக அதிக கடன்களை வாங்கிய நாடுகளுக்குச் சவாலை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.

English summary
China will overtake the United States to become the world's biggest economy in 2028, five years earlier than previously estimated due to the contrasting recoveries of the two countries from the COVID-19 pandemic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X