லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு பயந்து கட்டி பிடிக்காம இருக்க முடியுமா.. இதோ அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சுட்டாங்களே!

பிளாஸ்டிக் திரை ஒன்றை உருவாக்கி, பாட்டியை பேரன் பாசத்தோடு கட்டிப் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் பாட்டியை கட்டிப்பிடிக்க இணைத்த பேரன், அதற்காக பிரத்யேக திரை ஒன்றை உருவாக்கி பாராட்டுகளை குவித்து வருகிறார்.

இக்கட்டான காலகட்டத்தில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆறுதல் சொல்வதே அருமருந்தாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொடுதல் என்பதே கெடுதலாக மாறிவிட்டது.

Corona crisis: Man makes cuddle curtain to hug granny

தொட்டால் பரவும் கொடிய வைரஸ் கொரோனா. எனவே தான் அறிமுக சந்திப்பில் கைக்குலுக்கும் பழக்கத்தைக்கூட விட்டொழித்து வருகிறது உலகம். இந்திய பாரம்பரிய முறைப்படி இரு கைக்கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கம் அமெரிக்கா வரை பிரபலமாகி வருகிறது.

கோட்டைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின்... உற்சாகம் பொங்க வரவேற்ற அமைச்சர் செங்கோட்டையன்கோட்டைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின்... உற்சாகம் பொங்க வரவேற்ற அமைச்சர் செங்கோட்டையன்

இது ஒருபுறம் இருக்க தங்களுடைய அன்பு சொந்தங்களை ஆரத்தழுவி கொஞ்ச முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய தன்னுடைய தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த அமெரிக்க சிறுமி, ஒரு நூதன முறையை கையாண்டார். பிளாஸ்டிக் திரையை உருவாக்கி தாத்தா பாட்டியை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார்.

அந்த சிறுமியை பின்பற்றி, சில மாற்றங்களோடு இங்கிலாந்தை சேர்ந்த அந்தோனி கெவின் என்பவர் அதே போன்றதொரு திரையை உருவாக்கி தனது பாட்டியை ஆரத்தழுவி மனம் மகிழ்ந்துள்ளார். அந்த திரைக்கு அவர் கட்டிப்பிடிக்கும் திரை என பெயர் வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகேந்திரா உள்ளிட்ட பலர் அந்தோணியின் வீடியோவை லைக் செய்துள்ளனர். சுமார் 55 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 78,000த்துக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ள இந்த வீடியோவை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

English summary
A man in England made a cuddle curtain so that he could hug his grandmom amid the novel coronavirus crisis. The video has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X