லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசியாவை சேர்ந்தவரா.. தள்ளி நில்லுங்கள்.. உலகம் முழுக்க அதிகரிக்கும் இனப்பாகுபாடு.. காரணம், கொரோனா!

Google Oneindia Tamil News

Recommended Video

    நடு கடலில் தவிக்கும் 3500 பேர்.. வேகமாக பரவும் கொரோனா.. திரில்லர் படங்களை மிஞ்சிய பயங்கரம் - வீடியோ

    லண்டன்: கொடிய கொரோனா வைரஸ் உலகளவில் பரவியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள ஆசிய சமூகங்கள் பிற சமூகத்தினரால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில், ஒரு நோயாளி தனக்கு அறுவை சிகிச்சை செய்த சீன டாக்டர் ரியா லியாங்கிற்கு கை கொடுக்க கூட மறுத்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உலகம் முழுக்கவுமே இப்போ அப்படித்தான் என்ற நிலை உருவாகியுள்ளதால் அந்த அதிர்ச்சி பெரிதாக தெரியவில்லை.

    Coronavirus: Asian communities around the world are finding themselves subject to suspicion

    இத்தாலிய நகரமான வெனிஸில் சீன சுற்றுலாப் பயணிகள் விரட்டிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது, டுரினில் உள்ள ஒரு சீனக் குடும்பம் இந்த நோயை அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மிலன் நகரில் உள்ள தாய்மார்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி குழந்தைகளை சீன வகுப்பு தோழர்களிடமிருந்து ஒதுக்கி வைக்குமாறு பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    கனடாவில், ஒரு மாலின் வாகன நிறுத்துமிடத்தில் சீனாவை சேர்ந்த கனடிய பெண்மணியிடம் "நீங்கள் உங்கள் கொரோனா வைரஸை கைவிட்டுவிட்டு உள்ளே வாங்க" என்று சொன்ன ஒரு வெள்ளைக்காரரின் வீடியோ வைரலாகியுள்ளது. மலேசியாவில், "சீன மக்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும்" என்று மனு தயாரித்து, ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 500,000 கையொப்பங்களைப் பெற்றுள்ளனர்.

    டாக்டர் லி இறப்பதற்கு முன்பே இறந்ததாக அறிவித்த அரசு.. கொதித்தெழுந்த சீனர்கள்.. நேற்று என்ன நடந்தது?டாக்டர் லி இறப்பதற்கு முன்பே இறந்ததாக அறிவித்த அரசு.. கொதித்தெழுந்த சீனர்கள்.. நேற்று என்ன நடந்தது?

    இதையெல்லாம் வைத்து பார்த்தால், இனரீதியான பாகுபாடை கொரோனா வைரஸ் தாக்கம், தூண்டிவிடுவதாக மனித நேய ஆர்வலர்கள் குற்றம் சொல்கிறார்கள். சீனா அல்லது ஆசிய தோற்றமுடைய மக்களை ஆஸ்திரேலிய மக்கள் ஒதுக்கி வைத்து பார்க்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    English summary
    Due to coronavirus spread worldwide, Asian communities around the world are finding themselves subject to suspicion and fear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X