லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. தொடர்ந்து 3வது நாளாக ஐசியூ.. தீவிர சிகிச்சை.. எப்படி இருக்கிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா காரணமாக மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Recommended Video

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி..உடல்நிலை மோசமானது..

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா ஏற்பட்டது அந்நாட்டை பெரிய அளவில் உலுக்கி உள்ளது. அந்நாட்டு பிரதமர் மாளிகையில் சுகாதாரத்துறை ஆலோசகர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    அதே சமயம் தீவிர சிகிச்சை மூலம் சார்ல்ஸ் குணப்படுத்தப்பட்டார். அவரை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா ஏற்பட்டது. போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் 26ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

    சீனா எவ்வளவு பணம் கொடுத்தது.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. டிரம்ப் கேட்ட கேள்வி.. சிக்கலில் ஹு!சீனா எவ்வளவு பணம் கொடுத்தது.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. டிரம்ப் கேட்ட கேள்வி.. சிக்கலில் ஹு!

    ஐசியூ சிகிச்சை

    ஐசியூ சிகிச்சை

    கொரோனா பாதித்து 10 நாட்கள் கழித்து போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா அறிகுறிகள் கொஞ்சம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டலில் இருக்கும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது நிலை

    தற்போது நிலை

    இந்த நிலையில் தற்போது பிரிட்டிஷ் அரசு நிர்வாகத்தை இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுணக்தான் கவனித்து வருகிறார். இவர் அந்நாட்டு மூத்த அமைச்சர் மற்றும் கருவூலதலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிர்வாகத்தை கவனித்து வரும் இவர், போரிஸ் ஜான்சனின் உடல் நிலை குறித்து நேற்று பேட்டி அளித்தார். அதில், போரிஸ் ஜான்சனின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது.

    முன்னேறி வருகிறார்

    முன்னேறி வருகிறார்

    அவருக்கு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு தீவிர சிகிச்சை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் எனக்கு நல்ல நண்பர், என்னுடைய பாஸ், என்னுடன் வேலை பார்க்கும் நபர். அவருக்காக நான் இந்த பணிகளை செய்து வருகிறேன். அவர் விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.

    போரிஸ் ஜான்சன் பேசுகிறார்

    போரிஸ் ஜான்சன் பேசுகிறார்

    மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சைக்கு அவர் உடல் சரியாக பதில் அளிக்கிறது. மோசமான உடல்நிலையில் இருந்து கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரால் பேச முடிகிறது. அவரால் கட்டிலில் எழுந்து உட்கார முடிகிறது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, என்று ரிஷி சுணக் கூறியுள்ளார்.

    English summary
    Coronavirus: Boris Johnson 'improving' a little bit after three days in intensive care treatment in London.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X