லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்!

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளில் மூன்று முக்கியமான மருந்துகளை பிரிட்டன் வாங்கி குவித்து உள்ளது.

Recommended Video

    Oxford covid vaccine| முதல்கட்ட சோதனை வெற்றி| Oneindia Tamil

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனையில் இன்று முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இரண்டு கட்ட சோதனை முடிந்து மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகார பூர்வமாக இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு

    என்ன திருப்பம்

    என்ன திருப்பம்

    கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளில் மூன்று முக்கியமான மருந்துகளை பிரிட்டன் வாங்கி குவித்து உள்ளது. மொத்தம் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) மற்றும் வால்நேவா (Valneva) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மூன்று விதமான கொரோனா தடுப்பு மருந்துகளை பிரிட்டன் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    என்ன மாதிரியான ஒப்பந்தம்

    என்ன மாதிரியான ஒப்பந்தம்

    இந்த மூன்று நிறுவனங்கள் உருவாக்கி சோதனை செய்து வரும், இந்த தடுப்பு மருந்துகள் மீது இனி பிரிட்டன் சோதனை செய்யலாம். இதற்கான மனித சோதனைகளை விரைவில் பிரிட்டன் செய்ய இருக்கிறது. இந்த மருந்துகள் இதுவரை செய்யப்பட்ட கொரோனா தடுப்பு சோதனைகளில் நல்ல முடிவுகளை தந்து உள்ளது. இந்த முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. மக்கள் மீது எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் பிரிட்டன் இதை வாங்குகிறது.

    எத்தனை டோஸ்கள்

    எத்தனை டோஸ்கள்

    மொத்தமாக 9 கோடி டோஸ்களை பிரிட்டன் வாங்குகிறது. அதன்படி பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 3 கோடி டோஸ்களை பிரிட்டன் வாங்குகிறது. 6 கோடி டோஸ்களை வால்நேவா (Valneva) நிறுவனத்திடம் இருந்து பிரிட்டன் வாங்குகிறது. அதேபோல் ஆக்ஸ்போர்ட் உருவாக்கும் AZD1222 மருந்துகளை 10 கோடிகளை வாங்குகிறது.

    ஸ்டேஜ் 2

    ஸ்டேஜ் 2

    இதில் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) ஆகிய நிறுவனங்கள் உருவாக்கி இருக்கும் மருந்துகள் சோதனையில் இருக்கிறது. ஸ்டேஜ் 2 ல் சோதனையில் இவர்களின் மருந்துகள் உள்ளது. இருப்பினும் இந்த மருந்தில் 3 கோடி டோஸ்களை வாங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. மிகப்பெரிய திட்டங்களை மனதில் வைத்து இந்த மருந்தை பிரிட்டன் வாங்குகிறது.

    ஏன் இப்படி?

    ஏன் இப்படி?

    இந்த நான்கு மருந்துகளில் ஏதாவது ஒன்று அல்லது எல்லாமும் சோதனையில் மொத்தமாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. இதனால் நான்கு மருந்துகளையும் மொத்தமாக பிரிட்டன் தற்போது வாங்கி குவித்து உள்ளது. எந்த ஒரு மருந்து வெற்றிபெற்றாலும் அதில் உற்பத்தியை அதிகரிக்கும் முடிவில் பிரிட்டன் இருக்கிறது. பிரிட்டன் பொதுமக்களுக்கு மருந்து எளிதாக கிடைக்கும் வகையில், இந்த மருந்துகளை பிரிட்டன் வாங்க முடிவு செய்துள்ளது.

    English summary
    Coronavirus: Britain made a deal to buy 9 Crore vaccine doses from three companies also 10 Crore doses from Oxford.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X