லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்பு

Google Oneindia Tamil News

லண்டன் : கொரோனா வைரஸ் நுரையீரலை தான் அதிகம் பாதிப்பதாகவும், நுரையீரல் பாதிப்பால் சுவாசிக்க சிரமப்பட்டு நோயாளிகள் இறப்பதாகவும் கருதப்பட்டு வந்தது.

Recommended Video

    5ஜி மூலம் கொரோனா பரவுகிறதா? உண்மை என்ன?

    ஆனால், அதோடு இதய பாதிப்பாலும் பலர் இறப்பது முதற்கட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

    அதன்படி ஐந்தில் ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை இதயம் சார்ந்த எந்த பிரச்சனையும் இல்லாதவர்களுக்கு கூட திடீரென இதயம் பாதித்து, இதயம் நின்று போகிறது. அதன்படி, இப்போது அளித்து வரும் சிகிச்சைகள் போதாது என தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னை முதலிடம்.. ஷாக் கொடுத்த திருச்சி தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னை முதலிடம்.. ஷாக் கொடுத்த திருச்சி

    கொரோனா வைரஸ் பாதிப்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பு

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள். அந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் மனித உடலில் என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையே இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள் மருத்துவர்கள்.

    நுரையீரல் பாதிப்பு

    நுரையீரல் பாதிப்பு

    இதுவரை மருத்துவ உலகம் கொரோனா வைரஸ் பற்றி அறிந்து வைத்துள்ள முக்கிய விஷயம், அது நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. அதனால், வறட்டு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். பாதிப்பு தீவிரமடைந்தால், நோயாளிகள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு அப்போது செயற்கை ஆக்சிஜன் உதவி நிச்சயம் தேவை. இந்த அடிப்படையில் தான் இதுவரை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆய்வு முடிவு

    ஆய்வு முடிவு

    ஆனால், தற்போது சீனா, இத்தாலி, வாஷிங்க்டன், நியூயார்க் போன்ற பகுதிகளில் இருந்து அதிக ஆய்வு அறிக்கைகள் வெளியாகி வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ஐந்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. அது இதய செயலிழப்புக்கு காரணமாக அமைகிறது. நுரையீரல் பாதிப்பே இல்லாதவர்கள் கூட பலியாகிறார்கள்.

    சிகிச்சை முறையை மாற்ற வேண்டும்

    சிகிச்சை முறையை மாற்ற வேண்டும்

    இப்போது இந்த தகவலின்படி மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளின் துவக்க காலத்தில் ஏற்கனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக இதய பாதிப்பு சிகிச்சைகளை துவங்க வேண்டும். இதுவரை அளித்து வரும் நுரையீரல் சிகிச்சைகள் மட்டும் போதாது. அப்போது, இதய சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகளுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் சிக்கலும் ஏற்படும்.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    இதய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, உண்மையில் இதய பாதிப்பிற்கு காரணம் கொரோனா வைரஸ்-ஆ? அல்லது அந்த வைரஸ் பாதிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதயத்தை பாதிக்க செய்கின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தெளிவான ஆய்வுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

    நேரடி இதய பாதிப்பு

    நேரடி இதய பாதிப்பு

    அதே சமயம், துவக்கத்தில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் ஆய்வுகளில் நுரையீரலில் கொரோனா வைரஸ் எந்த ரிசப்டார்களில் (Receptor) ஒட்டிக் கொண்டு இருக்கிறதோ, அதே ரிசப்டார்கள் இதயத்தின் தசைகளிலும் உள்ளன. இதை வைத்துப் பார்த்தால், கொரோனா வைரஸ் இதயத்தை நேரடியாக பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இதய பாதிப்பால் மரணம்

    இதய பாதிப்பால் மரணம்

    சீனாவில் மார்ச் மாதம் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியாகின. அந்த ஆய்வுகள் 416 நோயாளிகளிடம் செய்யப்பட்டது. அதில் 19 சதவீதம் பேர் இதய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், அந்த ஆய்வின் படி இதய பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் 51 சதவீதம் பேர் இறக்கிறார்கள். அதே சமயம், இதய பாதிப்புக்கு உள்ளாகாத நோயாளிகளில் 4.5 சதவீதம் மட்டுமே இறந்துள்ளனர்.

    திடீர் பாதிப்பு

    திடீர் பாதிப்பு

    ஏற்கனவே, இதய பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின், அதிக இதய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. ஆனால், இதய பாதிப்பே இல்லாதவர்கள் கூட திடீரென கடுமையாக இதய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதே போல, சிலர் மற்றவர்களை விட மிக அதிக இதய பாதிப்பை வெளிப்படுத்துகிறார்கள். இதுவும் மர்மமாக உள்ளது.

    தகவல் சேகரிக்க முடியவில்லை

    தகவல் சேகரிக்க முடியவில்லை

    முதற்கட்ட ஆய்வுகளில் இத்தனை தகவல்கள் கிடைத்தாலும், மேற்கொண்டு ஆய்வு செய்ய முடியாமல் தவிக்கின்றனர் மருத்துவர்கள். அதற்கு முக்கிய காரணம், அடுத்த கட்ட ஆய்வாக இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்து இதய பாதிப்பு பற்றி ஆராய வேண்டும். ஆனால், அவர்கள் மிக மோசமாக உடல் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.

    தொற்று அபாயம்

    தொற்று அபாயம்

    அவர்களை பிரேதப் பரிசோதனை செய்தால் அதிக அளவு மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்த நிலையில், பல நாடுகளில் மருத்துவர்கள் குழுவாக செயல்பட்டு தாங்கள் சேகரித்த தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகின்றனர். அதன் மூலம், இந்த இதய பாதிப்பு பற்றிய புரிதலை மேற்கொள்ள முயன்று வருகிறார்கள்.

    English summary
    Coronavirus : One in five gone through hear damage says reports. This mystery is yet to be solved as doctors are not able to collect information.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X