லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்ட் உருவாக்கிய கொரோனா "ChAdOx1 nCoV-19" தடுப்பூசி.. குரங்கு சோதனையில் வெற்றி.. திருப்பம்!

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசியை வைத்து குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசியை வைத்து குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது.

Recommended Video

    ஆக்ஸ்போர்ட் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி.. குரங்கு சோதனையில் வெற்றி

    உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இப்படி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகிறது.

    கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது.

    காலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது!காலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது!

    யார் தடுப்பூசி

    யார் தடுப்பூசி

    இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் அந்த பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு பெயர் ''ChAdOx1 nCoV-19'' என்பதாகும். இதை விளக்கமாக chimpanzee adenovirus vaccine vector (ChAdOx1) என்று கூறலாம். ChAdOx1 வகை தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது ஆகும்.

    எப்படி செயல்படுக்கிறது

    எப்படி செயல்படுக்கிறது

    adenovirus வகை வைரஸ் மூலம் இந்த ''ChAdOx1 nCoV-19'' தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. adenovirus வகை வைரசை வைத்து நிறைய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த adenovirus வகை வைரஸை ஒரு மட்டுப்படுத்தட்ட கொரோனா வைரஸ் போல மாற்றுவார்கள். அதன்பின் இதை தடுப்பூசியாக உடலில் செலுத்துவார்கள். இந்த adenovirus தான் தடுப்பூசிக்கான மருந்துகளை சுமந்து கொண்டு உடலுக்குள் செல்லும். இந்த தடுப்பூசி கொரோனாவில் இருக்கும் கூம்புகளை தாக்கி அழிக்கும். உடலில் உண்மையில் கொரோனா வைரஸ் தாக்கும் போது, இந்த தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் தாக்கி அழிக்கப்படும்.

    மனித சோதனை முடிந்துள்ளது

    மனித சோதனை முடிந்துள்ளது

    இதற்கான மனித சோதனை ஏற்கனவே முடிந்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சில வாரங்கள் கழித்து இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். மனிதர்கள் மீது தொடர்ந்து இந்த தடுப்பூசியை வைத்து சோதனை செய்ய இருக்கிறார்கள். இதற்கான அடுத்தகட்ட சோதனையை அடுத்த வருடம் செய்ய இருக்கிறார்கள். இந்த சோதனை நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது.

    குரங்கு சோதனை

    குரங்கு சோதனை

    இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசியை வைத்து குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது. அதன்படி குரங்குகள் மீது இந்த தடுப்பூசியை செலுத்திய பின் சில குரங்குகளுக்கு 14 நாட்களுக்குள் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. சில குரங்குகளுக்கு 28 நாட்களுக்குள் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது.

    எப்படி எதிர்ப்பு சக்தி வருகிறது

    எப்படி எதிர்ப்பு சக்தி வருகிறது

    குரங்குகளுக்கு இந்த எதிர்ப்பு சக்தியை செலுத்திவிட்டு, அதன்பின் 14 நாட்கள் கழித்து உடலில் கொரோனா வைரசை செலுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இந்த தடுப்பூசி கொரோனா வைரஸை தடுத்துள்ளது. அதன் இனப்பெருக்க திறன் மற்றும் வளரும் திறனை மட்டுப்படுத்தி உள்ளது. அதோடு இந்த வைரஸ் இதயத்தை தாக்குவதை தடுப்பூசி தடுத்துள்ளது. மூக்கில் மட்டும் கொரோனா வைரஸ் வீரியத்துடன் இருந்துள்ளது.

    ஆக்ஸ்போர்ட் வெற்றி

    ஆக்ஸ்போர்ட் வெற்றி

    கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி சோதனையில் இது முதல்கட்ட வெற்றி என்கிறார்கள். இது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது. குரங்குகளிடமும் மனிதர்களிடமும் இது தொடர்பாக அடுத்தகட்ட சோதனைகளை செய்ய வேண்டும். உடனே இந்த மருந்துகளில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள். இதனால் விரைவில் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Coronavirus: Oxford's Vaccine named ChAdOx1 nCoV-19 succeeded in Monkey Test, Human test result will come soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X