லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நர்ஸ் மேரி.. கர்ப்பிணியாக இருந்தும் கூட ஓடி ஓடி சேவை.. கடைசியில் அதே கொரோனாவுக்கு பலி

கர்ப்பிணி நர்ஸ் கொரோனாவால் மரணமடைந்தாலும் அவரது குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

லண்டன்: நிறைமாத கர்ப்பிணியான நர்ஸ் மேரிக்கு எப்போதுமே சேவை... சேவை.. சேவைதான்.. ஆஸ்பத்திரிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து நிலையில், கடைசியில் மேரிக்கும் கொரோனா ஒட்டிக் கொண்டது.. பச்சிளம் குழந்தை பிறந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார் நர்ஸ் மேரி!!

லண்டன் அருகேயுள்ள லூட்டன் நகரில், லூட்டன் அண்ட் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.. இந்த ஆஸ்பத்திரியில் 5 வருஷமாக நர்ஸ் ஆக வேலை பார்த்து வந்தவர்தான் மேரி அகியேவா அகியா போங்.. வயசு 28 ஆகிறது!!

ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர்.. நல்ல அறிவு.. பொறுமை.. நிதானத்துடன் நோயாளிகளை கவனித்து கொள்பவர்.. இப்போது கொரோனா காலம் என்பதால் கர்ப்பமாக இருந்தபோதும் லீவு எடுக்காமல் பணியை கவனித்து வந்தார்.

கர்ப்பிணி

கர்ப்பிணி

பிரசவ காலம் நெருங்கும்போதுகூட, மேரிக்கு சேவை சேவை சேவைதான்.. விழுந்து விழுந்து நோயாளிகளை கவனித்து வந்த நிலையில், கடைசியில் மேரிக்கும் வைரஸ் தொற்றி கொண்டது. ஏப்ரல் 5-ந் தேதி அவருக்கு டெஸ்ட் செய்து பாத்தபோது தொற்று உறுதியானது.. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையும் தரப்பட்டது.. மேரி நிறைமாத கர்ப்பிணி.. குழந்தைக்கும் எதுவும் ஆக கூடாது, மேரிக்கும் குணமாக வேண்டும் என்று டாக்டர்கள் பெரும் முயற்சியை எடுத்தனர்.

நர்ஸ் மேரி

நர்ஸ் மேரி

ஒரே வழி, ஆபரேஷன் தான்... முதலில் குழந்தையை காப்பாற்றி வெளியே எடுத்துவிட வேண்டும், பிறகு மேரிக்கு ட்ரீட்மென்ட் தர வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படியே ஆபரேஷன் செய்யப்பட்டது.. மேரிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் மேரியின் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது.. எல்லாமே கை மீறி போன நிலையில் உயிரிழந்துவிட்டார்.

குழந்தை

குழந்தை

இந்த மரணம் குறித்து என்எச்எஸ் டிரஸ்டின் தலைமை அதிகாரி டேவிட் கார்ட்டர் சொல்லும்போது, "மேரி ஒரு சிறந்த நர்ஸ்.. இந்த மருத்துவ எதற்காக செயல்படுகிறது என்பதற்கு அவர் ஒரு மிகப்பெரிய உதாரணம்... இப்படி ஒரு நெருக்கடி, இருள் சூழந்த நேரத்தில் இந்த குழந்தைதான் நம்பிக்கை வெளிச்சம் அளிக்கிறது" என்று உருக்கத்துடன் கூறுகிறார்!!

நன்றி

நன்றி

துயரமும், ஆபத்தும் நிறைந்த இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில், தன்னிலை பாராமல், சுய விருப்பு-வெறுப்பின்றி, சுக-துக்கங்களை மறந்து... ஆஸ்பத்திரியே கதி என்று கிடந்து... கடைசியில் இறப்பை மட்டுமே தழுவி வருகின்றனர் எத்தனையோ டாக்டர்களும் நர்ஸ்களும்! இந்த உலகம் கடைசி வரை இவர்களை மறக்காமல் இருந்தால் சரி!!

English summary
coronavirus: pregnant nurse dies from coronavirus but baby saved in uk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X