லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐரோப்பிய நாடுகளையும் தாக்கிய கொரோனா.. பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலியிலும் மளமளவென பரவுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    அக்கரை சீமை 04-02-2020 | World news update 04-02-2020

    லண்டன்: கொடூர கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. மருத்துவத்தில் முன்னேறிய அந்த நாடுகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

    சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது. அந்த நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

    இப்படியான பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு, ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ள நாடுகள்தான். லேட்டஸ்டாக பெல்ஜியம் நாட்டிலும், கொரோனா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    மருத்துவக் கண்காணிப்பை ஏமாற்றும் கேரளா மக்கள்.. கொரோனா உக்கிரமாக பரவும் அபாயம்.. அமைச்சர் கவலைமருத்துவக் கண்காணிப்பை ஏமாற்றும் கேரளா மக்கள்.. கொரோனா உக்கிரமாக பரவும் அபாயம்.. அமைச்சர் கவலை

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிவுரையில், சீனாவுக்கு எந்தவொரு அத்தியாவசிய பயணமும் கூட மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தது. ஏற்கனவே அங்கு இருந்த பிரெஞ்சு குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என்றும், அந்த அறிவுரையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சீனாவில் 20,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 425 பேர் இறந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கில் மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர், மேலும் 20 நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன.

    பெல்ஜியம்

    பெல்ஜியம்

    இதற்கிடையில், பெல்ஜியம் அதன் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் வுஹானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 9 குடிமக்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு காணப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், நோயின் எந்த அறிகுறிகளையும் இப்போது காட்டவில்லை என்றும் பெல்ஜிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நபரை மேலும் கண்காணிக்க சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மற்றவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    ஜெர்மனி

    ஜெர்மனி

    ஜெர்மனியில் புதிதாக, 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 28 பேர் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஜெர்மனியில் 12 பேருக்கு பாதிப்பு உள்ளன, பிரான்ஸ் 6, ரஷ்யா, இத்தாலி மற்றும் பிரிட்டனில் தலா இரண்டு மற்றும் பின்லாந்து, சுவீடன், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகளிலும் தலா இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தாலிக்கு இழப்பு

    இத்தாலிக்கு இழப்பு

    கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலி இந்த ஆண்டு சுற்றுலா வருவாயில் 4.5 பில்லியன் யூரோக்கள் (4.97 பில்லியன் டாலர்) வரை இழக்க நேரிடும் என்று முன்னணி ஆய்வு நிறுவனமான டெமோஸ்கோபிகா தெரிவித்துள்ளது. இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா பங்களிப்பில் சுமார் 5% இந்த அளவு ஆகும். கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன.

    English summary
    The deadly coronavirus virus continues to spread rapidly in Europe. Those countries that are advanced in medicine are struggling to contain the coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X