லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்.. ஆச்சர்யம் தரும் "டெக்சாமெத்தசோன்" மருந்து.. ஹு நல்ல செய்தி!

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா பாதிப்பை குணப்படுத்தவும் இறப்புகளை குறைக்கவும் டெக்சாமெத்தசோன் (Dexamethasone ) மருந்து பெரிய அளவில் பலன் அளிக்கிறது என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. உலக சுகாதார மையம் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona பாதிப்பை குணப்படுத்தும் Dexamethasone - Oxford scientists கண்டுபிடிப்பு

    கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளை கொரோனாவின் சிகிச்சைக்கு பயன்படுத்தவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.

    உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இப்படி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஏற்கனவே தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்

    வேறு மருந்து

    வேறு மருந்து

    இந்த நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை தருவதில் டெக்சாமெத்தசோன் (Dexamethasone) மருந்து அதிக பலன் அளிப்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. டெக்சாமெத்தசோன் (Dexamethasone) என்பது 1960ல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஆகும். வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, குடலில் ஏற்படும் எரிச்சல் தொடர்பான பிரச்சனை, சில வகை கேன்சர், உடலில் ஏற்படலாம் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த டெக்சாமெத்தசோன் (Dexamethasone) பயன்படுத்தப்படுகிறது.

    பல நாடுகள் பயன்பாடு

    பல நாடுகள் பயன்பாடு

    உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் டெக்சாமெத்தசோன் (Dexamethasone) பயன்படுத்தப்படுகிறது. இதன் பார்முலாவை கொஞ்சம் மாற்றி பல்வேறு நோய்களுக்கு எதிராக டெக்சாமெத்தசோன் (Dexamethasone)ஐ பயன்படுத்த முடியும். இந்த நிலையில் இந்த மருந்தை கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பயன்படுத்தியது. இதற்காக 11500 நபர்களிடம் 175 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்பட்டது.

    என்ன ஆச்சர்யம்

    என்ன ஆச்சர்யம்

    இதன் முடிவுகள் ஆச்சர்யம் அளித்துள்ளது. ஜூன் 8ம் தேதி வரை செய்யப்பட்ட சோதனையில் முதல்கட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த டெக்சாமெத்தசோன் (Dexamethasone) பயன்படுத்தி சோதனை செய்ததில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமடைந்து உள்ளனர். முக்கியமாக இந்த டெக்சாமெத்தசோன் (Dexamethasone) காரணமாக இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    டெக்சாமெத்தசோன் மருந்து

    டெக்சாமெத்தசோன் மருந்து

    டெக்சாமெத்தசோன் (Dexamethasone) மருந்து பயன்படுத்தியதில், வெண்டிலேட்டர் பயன்படுத்தும் கொரோனா நோயாளிகளில் 3ல் ஒருவர் வேகமாக குணமடைந்து இருக்கிறார். அதேபோல் ஆக்சிஜன் உதவியுடன் செயல்படும் நோயாளிகளில் 5ல் ஒருவர் எளிதாக குணமாகிறார். இவர்களின் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. இது மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் முடிவு என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    என்ன சொன்னது

    என்ன சொன்னது

    இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள செய்தியில், டெக்சாமெத்தசோன் (Dexamethasone) பயன்பாடு நல்ல பலன் அளிப்பதாக அறிய வந்துள்ளோம். எங்களுக்கு இது நம்பிக்கை அளிக்கிறது. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியை நாங்கள் வரவேற்கிறோம். இந்த ஆராய்ச்சி முடிவின் புள்ளி விவரங்களை சோதனை செய்ய இருக்கிறோம். அதேபோல் டெக்சாமெத்தசோன் (Dexamethasone) குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்வோம்.

    புள்ளி விவரம்

    புள்ளி விவரம்

    அதன் முந்தைய கால பயன்பாடு. அது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த புள்ளி விவரங்கள் மூலம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம். தற்போது டெக்சாமெத்தசோன் (Dexamethasone) காட்டும் முடிவுகள் மிகவும் சிறப்பானதாக, நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இதனால் கொரோனா சிகிச்சையில் டெக்சாமெத்தசோன் (Dexamethasone) உண்மையில் பெரிய திருப்பமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    English summary
    Coronavirus: WHO welcomes the Oxford's research on Dexamethasone medicine on Covid-19 patients.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X