லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல்.. கொரோனாவுக்கு அஞ்சி தனித்தீவில் வசிக்கும் தம்பதி!

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா பரவலில் இருந்து தற்காத்து கொள்ள தம்பதி தனித்தீவில் தனித்து வசித்து வருகிறார்கள். இந்த தீவில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இந்த தீவில் வேறு மக்கள் யாரும் இல்லை.

கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவியது. இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதனால் லண்டனில் கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

கொரோனா பரவலில் இருந்த தங்களை தற்காத்து கொள்ள நினைத்த ஒரு தம்பதி ஒரு தனித்தீவில் வசித்து வருகிறார்கள். ஆம், லண்டனை சேர்ந்தவர் லுக் சாரா- ஃபிளாங்கன் தம்பதி கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு தீவிற்குச் சென்று வசிக்க முடிவு செய்தனர்.

 பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா.. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 60 ஆயிரம் பேர் வைரஸால் பாதிப்பு பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா.. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 60 ஆயிரம் பேர் வைரஸால் பாதிப்பு

 தனிமை

தனிமை

அதன்படி அவர்கள் இருவரும் லண்டனில் லாக்டவுன் அறிவிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பே அயர்லாந்து நாட்டின் ஓவே என்ற தீவிற்கு சென்றனர். அந்த தீவில் மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. அவ்வப்போது யாராவது தனிமையில் இருக்க விரும்பினால் அந்த தீவிற்கு வந்து ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு சென்றுவிடுவர்.

 அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள்

அதிலும் கோடை காலத்தில் மட்டுமே மக்கள் இங்கு வந்து தங்குவது வழக்கம். மற்ற காலங்களில் அந்த தீவில் கடுங்குளிர் நிலவும் என்பதால் யாரும் அங்கு செல்வதில்லை. இதுவே சாரா தம்பதிக்கு வசதியாக போய்விட்டது. தற்போது அந்த தீவிலேயே வாழத் தொடங்கிவிட்டனர். அங்கு மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது.

மழைநீர்

மழைநீர்

இதையறிந்த சாரா தம்பதி அங்கு செல்வதற்கு முன்பே தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டனர். மின்சாரத்திற்காக சோலார் பேனலை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் சார்ஜ் செய்வது, மின்சார அடுப்பைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தேவைகளை தீர்த்து கொள்கிறார்கள். ஒரு சிறிய தொட்டியை கட்டி வைத்து அதில் மழை நீரை சேமித்து கொள்கிறார்கள்.

 மீன் பிடித்தல்

மீன் பிடித்தல்

அந்த பகுதியில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள் கொண்டு சமைக்கிறார்கள். கடலில் மீன் பிடித்து அதையும் உண்கிறார்கள். கொரோனாவிற்கு பிறகு உலகிலேயே கிட்டதட்ட 9 மாதங்களுக்கு மேல் தனிமைப்படுத்திக் கொண்ட தம்பதி இவர்கள்தான். தற்போது லண்டனில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இவர்களின் முடிவும் சரிதான். நித்யானந்தாவும் கொரோனா பரவலைத் தடுக்கவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கைலாசா தீவில் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Couple wants to avoid Covid 19 pandemic entered into a island which has no electricity and no water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X