லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'ஏ' பாசிட்டிவ் இரத்தம் உள்ளவர்களை கொரோனா மோசமாக பாதிக்கிறது? யாரை அதிகம் பாதிக்காது?

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் போது மக்களை கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு இரத்தக் குழுக்கள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள கொரோனா அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் நகரங்களில் 1,600 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 'ஏ' பாசிட்டிவ் இரத்தக் குழு உள்ளவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று பரிந்துரைத்துள்ளனர். ஓ உள்ளவர்கள் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

ப்ரீ பிரிண்ட் சர்வர் medRxiv இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. கொரோனா (சார்ஸ்-கோவ் -2) நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்கள் பொதுவானவையா என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் மரபணு அளவிலான பகுப்பாய்வை மேற்கொண்டனர்.

கொரோனா.. ஒரு நாள் பாதிப்பு.. ரஷ்யாவை முந்தியது இந்தியா.. ஒரே நாளில் 9889 பேருக்கு தொற்று உறுதிகொரோனா.. ஒரு நாள் பாதிப்பு.. ரஷ்யாவை முந்தியது இந்தியா.. ஒரே நாளில் 9889 பேருக்கு தொற்று உறுதி

ஓ ரத்தம் பாதிப்பு குறைவு

ஓ ரத்தம் பாதிப்பு குறைவு

ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டறிந்தனர், அதன்படி ஏ குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதையும் ஓ குருப் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதையும் காட்டியதாக கூறினார்கள்.

அறிகுறி இல்லை

அறிகுறி இல்லை

இந்த கொரோனா நோய் மனிதர்களிடையே ஏன் கணிக்கமுடியாமல் போகிறது என்பதைப் பற்றிய விஞ்ஞானிகளுக்கு கூடுதல் விஷயங்களை மரபணு ஆராய்ச்சி வழங்கும் என்கிறார்கள். அறிகுறிகள் கிட்டத்தட்ட இல்லாதது, காய்ச்சல் போன்ற நோயாக இருப்பது , மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில், மக்கள் சுவாசிக்க முடியாமல் போவது போன்றவை கொரோனா தொற்றில் உள்ள மோசமான அம்சம் ஆகும்.

10 சதவீதம் பேருக்கு

10 சதவீதம் பேருக்கு

சுவாச செயலிழப்பு (Respiratory failure ) கடுமையான கொரோனாவின் முக்கிய பிரச்சனையாகும். இதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 10% க்கும் குறைவானவர்களே சுவாச பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அதிகம் பாதிக்கிறார்கள்

அதிகம் பாதிக்கிறார்கள்

கொரோனா அறிகுறிகளின் மாறுபாடுகள் பெரும்பாலும் வயது மற்றும் பாலின போக்குகளை மீறுகின்றன, அவை வயதான ஆண்கள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று பெரும்பாலும் சொல்கின்றன. நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

Recommended Video

    கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
    யாருக்கு ஆபத்து அதிகம்

    யாருக்கு ஆபத்து அதிகம்

    இதனிடையே அண்மையில் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஹாட் ஸ்பாட் நகரங்களைச் சேர்ந்த 1,610 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 'ஏ' இரத்தக் குழு உள்ளவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று பரிந்துரைத்துள்ளனர். ஓ உள்ளவர்கள் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த பகுப்பாய்வு 2,205 இரத்த தானம் செய்பவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டது,
    அவர்களின் கண்டுபிடிப்புகள் கோவிட் -19 ஹோஸ்ட் மரபியல் கூட்டமைப்பிலிருந்து பகிரங்கமாக கிடைக்கக்கூடிய முடிவுகளை உறுதிப்படுத்துகின்றன.

    English summary
    Study published on preprint server medRxiv, is yet to be peer reviewed. The researchers said that those with blood group A+ were most at risk while those with O were protected to some degree.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X