லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்.. ஆடிப்போன அமெரிக்கா.. 5 நாடுகளில் நிலைகுலைய வைத்த மரணங்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் உச்சம் அடைந்து வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,216 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 839 பேர் பலியாகி உள்ளனர். 3வதாக ரஷ்யாவில் 817 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் 815 பேரும், மலேசியாவில் 487 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் வந்துள்ள கொரோனா 3வது அலை உலக வல்லரசு நாடுகளையே நிலைகுலைய செய்துள்ளது. அமெரிககா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், பிரேசில், மலேசியா, மெக்ஸிகோ உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. டெல்டா, ஆல்பா போன்ற வைரஸ்களால் கடும் பாதிப்புகளை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 230,836,374 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 207,536,200 பேர் குணம் அடைந்துவிட்டனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,731,622 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 9,205 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 18,568,552 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 97,878 பேர் கவலைக்கிடமான நிலையில் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

சென்னையில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எங்கு அதிகம்.. மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்சென்னையில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எங்கு அதிகம்.. மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்

முதலிடம்

முதலிடம்

உலகிலேயே கொரோனாவின் தீவிரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா . அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 117,989 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று அந்த எண்ணிக்கை 131,670 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,402,927 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 108,058 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,946,547 ஆக உள்ளது. ஒரே நாளில் நேற்று முன்தினம் 2,152 பேர் பலியாகினர். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2,216 பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 699,736 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே உச்சபட்சமாக அமெரிக்காவில் தான் 9,756,644 ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

2வது இடம்

2வது இடம்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு பிரேசிலில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உடன் ஒப்பிடும் போதும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு ஆகும். பிரேசிலில் ஒரே நாளில் 36,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21,283,567ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 45,340 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,295,538 ஆக உள்ளது. ஒரே நாளில் 839 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 592,357 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 395,672 ஆக உள்ளது.

3வது இடம்

3வது இடம்

அமெரிக்கா பிரேசிலுக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா பிரேசில் உடன் ஒப்பிடும் போதும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு ஆகும். இங்கிலாந்தில் ஒரே நாளில் 34,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,530,103 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 32,176 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,075,733 ஆக உள்ளது. ஒரே நாளில் 166 பேர் இங்கிலாந்தில் பலியாகி உள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 135,621 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1,318,749 ஆக உள்ளது.

4வது இடம்

4வது இடம்

இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா போலவே ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை இல்லை. இந்தியாவில் ஒரே நாளில் 31,957 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,562,034 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 31,968 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,808,175 ஆக உள்ளது. ஒரே நாளில் 279 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 446,080 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 307,779 ஆக உள்ளது.

Recommended Video

    C.1.2 அடுத்த உருமாறிய Corona.. Vaccine-க்கு கட்டுப்படாது.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
    5 வது இடம்

    5 வது இடம்

    இந்தியாவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு துருக்கியில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போல் அல்லாமல் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. துருக்கியில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 28,168 ஆக இருந்தது . இதனால் துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,932,453 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 23,096 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,411,476ஆக உள்ளது. ஒரே நாளில் 242 பேர் துருக்கியில் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 62,307 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 458,670 ஆக உள்ளது.

    நாடுகள் விவரம்

    நாடுகள் விவரம்

    உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,216 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் ஒரே நாளில் 839 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் ரஷ்யாவில் ஒரே நாளில் 817 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் 815 பேரும், மலேசியாவில் 487 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

    English summary
    In the last 24 hours alone, 2,216 people have died in the United States, the world's worst-affected country by corona. brazil is next with 839 victims in a single day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X