லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்டது

Google Oneindia Tamil News

லண்டன்: ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின் 70% தடுப்பாற்றல் கொண்டது என்று இடைக்கால மனித சோதனை முடிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை 90% வரை உயர்த்த முடியும் என்று சோதனை குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளில் ஆஸ்டெராசெனெகா மருந்து அதிக நம்பிக்கை அளித்துள்ளது. ஆஸ்டெராசெனெகா - ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் AZD1222 தடுப்பு மருந்து மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தடுப்பாற்றல்

தடுப்பாற்றல்

இறுதிக்கட்ட மனித சோதனையில் இந்த மருந்து உள்ளது.இந்த மருந்தின் 3ம் கட்ட மனித சோதனையின் இடைக்கால முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் 70% வெற்றி பெற்றுள்ளது. அதாவது இந்த மருந்து 70% தடுப்பாற்றல் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகம் ஆகும்

அதிகம் ஆகும்

ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பு மருந்து இதை விட அதிக தடுப்பாற்றல் கொண்டது. ஃபைசர் நிறுவனம் 95% தடுப்பாற்றல் கொண்டது. மாடர்னா நிறுவனம் 94.5% தடுப்பாற்றல் கொண்டது. ஆனால் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் 70% தடுப்பாற்றல்தான் கொண்டது. இருந்தாலும் குறைந்த விலை மற்றும் வெப்பநிலை காரணமாக ஆக்ஸ்போர்ட் மருந்து அதிகம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பாற்றல்

தடுப்பாற்றல்

இந்த மருந்தில் சிறிய மாற்றங்களை செய்து, முழுமைப்படுத்தும்பட்சத்தில் இதன் தடுப்பாற்றல் 90% தொட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து மொத்தம் 20 ஆயிரம் பேரிடம் யுகே மற்றும் பிரேசிலில் சோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்த 30 பேருக்கு கொரோனா வந்துள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

பொய்யான மருந்து (சத்து மருந்து) எடுத்தவர்களுக்கு 101 பேருக்கு கொரோனா வந்துள்ளது. இதன் மூலம் இதன் தடுப்பாற்றல் சதவிகிதம் 70% கொண்டது என்று இடைக்கால முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த மருந்தில் அதிக டோஸ் எடுக்கும் போது 62% தடுப்பாற்றல் உள்ளது. ஆனால் அதிக டோஸ் எடுத்துவிட்டு பின் குறைவான டோஸ் ஒன்று எடுத்தால் 90% தடுப்பாற்றல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயரலாம்

உயரலாம்

இது இடைக்கால சோதனை முடிவுகள் ஆகும். இதனால் வரும் நாட்களில் இந்த மருந்தின் தடுப்பாற்றல் சதவிகிதம் இதை விட அதிகமாக உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதில் பெரிய அளவில் பின்விளைவுகள் எதுவுமில்லை.இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து ஆஸ்டெராசெனெகா இந்த மருந்து உற்பத்தியை செய்கிறது.

எப்படி

எப்படி

ஆக்ஸ்போர்ட் - முதல் மற்றும் இரண்டாம் சோதனை - 2500+ பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக தற்போது 25000 பேரிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இறுதி சோதனை முடிவு இந்த வருட இறுதிக்குள் வெளியாகும்.

English summary
Covid Vaccine: Oxford Astrazeneca has 70% effectiveness says final test result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X