லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா லாக்டவுனால் இங்கிலாந்தில் மும்மடங்காக அதிகரித்த மன அழுத்தம் - எச்சரிக்கும் ஆய்வு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் மாதத்திலிருந்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், மன உளைச்சல் மற்றும் பதற்றம் தொடர்பாக இங்கிலாந்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 52 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்ட

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக மன உளைச்சல் மற்றும் பதற்றம் தொடர்பாக 52 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனநலப் பிரச்னைகள் மிகவும் ஆபத்தானவை. அவை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலைக்கு ஆளாக நேரிடும். எனவே, நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும் சுகாதாரத்துறையினரும் இந்த சவாலான நேரத்தில் மக்களின் மன ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உலக அளவில் மூன்றரை கோடி பேரை பாதித்துள்ளது கொரோனா வைரஸ். இரண்டரை கோடி பேர் குணமடைந்திருந்தாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் உலகத்தின் பல பகுதிகளை முடக்கிப்போட்டு விட்டது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Depression, anxiety tripled during Covid induced lockdown: UK study

இந்த நெருக்கடி மனரீதியாக பிரச்சினைகளையும் உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலகத்தில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. கொரோனா லாக்டவுனால் இங்கிலாந்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகக் கடுமையான மன அழுத்தத்தைச் சந்திப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனாவிற்கு இதுவரை 475,674 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 392,293 பேர் குணமடைந்துள்ளனர்.
27,192 பேர் உயிரிழந்துள்ளனர். 56,189 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களின் உளவியல் நலன் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்

இங்கிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகக் கடுமையான மன அழுத்தத்தைச் சந்திப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் மாதத்திலிருந்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், மன உளைச்சல் மற்றும் பதற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்து 52 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இது கொரோனாவிற்கு முன்னர் 17 சதவிகிதமாக இருந்த நிலையில், இப்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்தில் இளையவர்கள், பெண்கள், வேலையில்லாதவர்கள் அல்லது குறைந்த வருமானத்தில் உள்ளவர்கள் மனரீதியாக அதிகம் பாதிக்கப்படுவதாக ஜர்னல் சைக்கோசோமேடிக் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசத்தின் மன ஆரோக்கியம் குறித்த பிரச்னையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று கூறியுள்ளார் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையைச் சேர்ந்தவரான டாக்டர் ஜெய்ம் டெல்கடிலோ

மனநலப் பிரச்னைகள் மிகவும் ஆபத்தானவை. அவை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலைக்கு ஆளாக நேரிடும். எனவே, நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும் சுகாதாரத்துறையினரும் இந்த சவாலான நேரத்தில் மக்களின் மன ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் மைக்கேல் பார்காம், கோவிட் 19 ஒரு மனநல சுகாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உளவியல் ஆரோக்கியம் குறித்து ஆராய இந்த ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டோம் என தெரிவித்தார். இந்த ஆய்வு பேராசிரியர் கிறிஸ்டோஃப் பை, ஆஸ்திரியாவின் பேராசிரியர் தாமஸ் ப்ராப்ஸ்ட் தலைமையில் ஆஸ்திரிய, பெல்ஜியம் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பில் நடைபெற்றுள்ளது.

English summary
There was a three-fold increase in the number of people reporting significant depression and anxiety problems during lockdown, according to a new study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X